தை மாத ராசி பலன் 2024: சூரியனுடன் கூட்டணி சேரும் உச்சம் பெற்ற செவ்வாய்.. ருசக யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் தை மாதம் பத்தாவது மாதம். மகர ராசிக்குள் சூரியன் நுழைவதால் மகரமாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தை மாதத்தில் சனியின் வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் ருசக யோகம் உருவாகப்போகிறது. இந்த கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ருசக யோகம்: கேந்திரம் எனக் கூறப்படும் லக்கினம், 4, 7, 10 ஆகிய இடங்களில் செவ்வாய் அமையும்போது ருசக யோகத்தை அளிப்பார். சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம், ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே ருசக யோகம் செயல்படும்.

Thai matha Rasi palan 2024: Thai month rasi Palan for Simmam,Kanni,Thulam,Viruchigam

சிம்மம் : உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார். அலுவலகத்தில் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், பிறரின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் நன்மைகள் உண்டாகும். உச்சம் பெற்ற செவ்வாயின் பார்வை கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரும். மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். வீடு,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கண்டச்சனி காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிகமான கவனம் செலுத்தவும்.

கன்னி : சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பதால் இந்த மாதம் அடிக்கடி உல்லாசப் பயணம் செல்வீர்கள், அப்பாவின் சொத்துக்களை பராமரிப்பதற்க்காக செலவுகள் செய்வீர்கள். வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பர்களுக்கு வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தியாகும். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணம் லாபத்தைத் தரும். வீடு மாறும் நிலை உண்டாகும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய நன்மை உண்டாகும்.

துலாம் : உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சூரியன் பயணம் செய்வதால் வீடு சொத்து வாங்கலாம். அரசாங்க ஒதுக்கீட்டின் மூலம் வீடு நிலம் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார் சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 22ஆம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். ருசக யோகம் கிடைக்கப்போகிறது தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கம். அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் மூலம் பண வருமானம் இரட்டிப்பு மடங்காக கிடைக்கும், வியாபாரம் செல்வ வளம் சிறப்படையும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் குதூகலம் கூடும்.

விருச்சிகம் : சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அரசாங்க ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும், தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் வருமானத்தை அதிகரிப்பார். உச்சம் பெறப்போகும் செவ்வாய், நில புலன்களின் மூலம் லாபம் உண்டாகும் 22ஆம் தேதி முதல் வீடு நிலம் வாங்கலாம். தரகு கமிஷன் மூலம் பண வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இந்த மாதம் தேடி வரும். தை பிறந்தாலே பொருளாதாரமும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். பெண்கள் பொன் நகைகள் வாங்குவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+