பிரச்சனைகளை தீர்த்து சுபிக்ஷமளிக்கபோகும் குருபெயர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: பலவித கஷ்டங்களில் இருந்து மக்கள் விடிவை தேடி தவிப்புடன் குருபெயற்சி நாளை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல கோயில்களில் குருபெயற்சி யாகங்கள் சிறப்பு பூஜைகள் செய்ய பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

நீண்ட நாட்களாக குருபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில்

the most awaiting jupiter s transit is coming in september 12th this year

தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி வருகின்ற ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலு திருக்கணித பஞ்சாங்கபடி

ஆவனி மாதம் 27ம் தேதி (12-09-2017) செவ்வாய்கிழமை காலை 6.51 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாராசிக்கு செல்ல இருக்கிறார்.

'குரு பார்க்க கோடி நன்மை ' என்பது ஆன்றோர் வாக்கு. மனிதர்களை நல் வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் எவரும் இல்லை. இவர் பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்ற பெண்மணிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஏழாவது பிள்ளை ஆவார். இவர் அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குருவாகத் திகழ்பவர். இந்திரனுக்கு அமைச்சராக இருப்பவர்.

இவர் நுண்ணறிவு உடையவராதலால் 'பிரகஸ்பதி' என்று அழைக்கப்படுகிறார். பிரகஸ்பதி என்ற சொல்லுக்கு ஞானத் தலைவன் என்று பொருள். மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு.

குரு பகவானின் 5, 7 மற்றும் 9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தருவதாகும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கும் பிறரை வணங்காத உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர்.

குரு பார்க்க கோடி நன்மை

ஒருமுறை ஜோதிட கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான். அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான். சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார். அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர். தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.

தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது. திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது. அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான். தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது?

குழந்தை எப்படிப் பிழைத்தது? தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

புன்னகை மாறாத தேவகுரு, அப்போதுதான் வாயைத் திறந்தார் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்? சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.

ஜோதிடத்தில் குருபார்வை:

ஜோதிடத்தில் பிரஹஸ்பதி எனும் குருபகவானின் பார்வை பற்றி விசேஷமாக கூறப்படுகிறது. குருபார்க்க கோடி நன்மை என கூறுவர்.

ஒருவர் ஜாதகத்தில் எத்தனை கொடுமையான தோஷம் இருந்தாலும் அவருக்கு குருபார்வை இருந்துவிட்டால் அனைத்து தோஷங்களும் விலகி சுபிக்ஷம் ஏற்படும். அதை சமயம் ஒருவர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலமாக இருந்தாலும் குரு மட்டும் பலமிழந்துவிட்டால் அவர் எதையுமே அனுபவிக்க முடியாது.

மரணத்திற்கு ஒப்பான கெண்டங்கள் ஒருவருக்கு ஜாதக ரீதியாக இருந்தால் கூட குருவின் அருள்பார்வை மட்டும் இருந்துவிட்டால் எமலோகத்தின் வாசல் வரை சென்றவர் கூட மீண்டு எழுவர். குருவின் பார்வை அவ்வளவு விஷேஷமானது.

ஒருவருக்கு திருமணமாக வேண்டும் என்றால் வியாழ நோக்கம் (குருபார்வை) வேண்டும் என்பார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த குருதான் புத்திரகார கனாகவும் இருக்கிறார்.

கால புருஷனுக்கு 6ம் இடத்தில் கன்னி ராசியில் இருந்துக்கொண்டு தனது ஐந்து, ஏழு ஒன்பது பார்வையால் மகரம், மீனம், ரிஷபம் ஆகிய ராசிகளை பார்த்து வந்த குருபகவான் தற்போது ஜென வசிய ராசிக்குள் ப்ரவேசிக்க போகிறார்.

குரு தனது பகை வீட்டிற்கு சென்றாலும் குரு சுக்கிர சேர்க்கை பல உன்னதமான பலன்களை அளிக்கும். மேலும் தனது பார்வையால் கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய ராசிகளை பார்க்கவிருக்கிறார். அவருடைய பெயர்சிக்கு முன்பாகவே கேது கும்பத்திலிருந்து மகரத்திற்கு சென்றுவிடுவார்.

எனவே கும்பத்தையும் மிதுனத்தையும் குரு பார்ப்பதால் குழந்தை பேற்றிற்காக நீண்டநாட்களாக எதிர்பார்த்து முயற்சித்து வந்த துலா/தனுசு/கும்ப ராசி/லக்ன காரர பெண்கள் கருதரிப்பார்கள்.

திருமணமாகாத சிம்ம,துலா மற்றும் தனுர் ராசி/லக்ன ஆண்/பெண்களுக்கு திருமணம் நடைபெறும். காலபுருஷனின் லக்னத்தை சம சப்தமமாக பார்பதால் ஆரோக்யம் மேம்படும். முக்கியமாக ஏழாமிடமாகிய கும்பத்தில் கேது நின்றதால் திருமணமாகாமல் தவித்த சிம்ம ராசி லக்ன காரர்கள் தற்போது தகுந்த ஜோடி புறாவோடு சேர்ந்துடுவர் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ரிஷப, கடக மற்றும் மகர ராசி லக்ன காரர்கள் குருவின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள்.

துலா ராசி லக்ன காரர்களுக்கு குரு ராசியில் இருப்பதால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் தனது 9ம் பார்வையால் பாக்கிய ஸ்தானமான மிதுனத்தை பார்ப்பதால் பலவித யோகங்களும் பாக்கியங்களும் வந்து சேரும்.

தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் கெளரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர் புத்திரகாரகன், பீதாம்பரர், பிரஹஸ்பதி, வியாழ பகவான் என போற்றப்படும் குருபகவானின் பெயற்சியை வரவேற்க்க தயாராவோமாக!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+