Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்.. ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட விழா வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம்தேதி நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம் இன்று கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்று முழக்கமிட்டு வழிபட்டனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது.

எந்த ஒரு சிவ தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே. திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. இத்தலம் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொன்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.

Tiruvarur Thyagarajar Temple Panguni Uthra festivak Flag Hoisting April 1 Azhi Therottam

இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.

தேரின் கட்டுமானத்திற்கு பயன்டுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்டமான வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது.

Tiruvarur Thyagarajar Temple Panguni Uthra festivak Flag Hoisting April 1 Azhi Therottam

ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வருகிற இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அப்போது ஆரூரா, தியாகேசா என்று பக்தர்கள் முழக்கமிட்டனர். கோவில் கோபுரங்களிலிருந்து மலர்களைத் தூவி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Tiruvarur Thyagarajar Temple Panguni Uthra festivak Flag Hoisting April 1 Azhi Therottam

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி அன்றைய தினம் நடைபெற உள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பாக 4 மரக்குதிரைகள், ரிஷபம் 8, யாளம் 2, பாம்பு யாளம் 1, பிர்மா 1, துவாரபாலகர் 2, கமாய் கால் 2, மேல் கிராதி 4, கீழ் கிராதி 2, பெரிய கத்தி கேடயம் 2, பூக்குடம் 16, ராஜாராணி 2, கிழவன் கிழவி 2, சுருட்டி 4, இலை 8, பின்பக்கம் காமாய் கால் 6, அம்பராத்தோணி 2 என மொத்தம் 68 வகையான பொம்மைகள் பொருத்தப்பட்டு தேரோட்டம் நடைபெறும். இதில் திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்வார்கள். பிரம்மாண்டமான ஆழித்தேர் ஆடி அசைந்து வருவதைகக் காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் ஆண்டு முழுவதும் தியாகராஜரின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி மாத திருவாதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி மாத உத்திர தினத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் அதிகாலை முதல் இரவு வரை மூலவர் தியாகராஜரின் வலப்பாதத்தை கண்டு தரிசிக்கலாம். இதுவே நிஜ பாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+