மருத்துவம் படித்து டாக்டராக ஆசையா? அப்ப வைத்தீஸ்வரன் கோயில் போங்க!

மருத்துவர்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் அருளும் ஈசனாக வைதீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ளார் இறைவன் வைத்தியநாத சுவாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிள்ளைகளை பெற்ற அனைவருக்கும் தங்கள் பிள்ளைகளை மருத்துவராக உருவாக்க வேண்டும் என்பதே முதல் உள்ள பொதுவான மற்றும் நியாயமான ஆசை மற்றும் லட்சியமாக இருக்கும். போனால் போகிறதென்று சிலர்
பொறியியல் வல்லுனாராக உருவாக்க லட்சியமாக கொள்கின்றனர். மருத்துவர் ஆனாலும் பொறியியல் வல்லுனர் ஆனாலும் ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்று இருக்க வேண்டும்.

கடந்த 19ம் தேதி மருத்துவ படிப்பிற்கான "நீட்" (NEET) எனும் தகுதி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மருத்துவ கல்லூரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எவ்வளவோ பேர் மருத்துவ படிப்பிற்காக முயற்சித்தாலும் ஒரு சிலருக்கே அது சாத்தியமாகிறது. மற்றவர்களுக்கு அது எட்டாகனி ஆகிவிடுகிறது.

உலகில் மருத்துவரையும் ஜோதிடரையும் மட்டுமே தெய்வத்தோடு இணைத்து வேதங்களும் இதிகாசங்களும் போற்றுகிறது. ஓருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரை அணுகும்போது "உங்களைதான் தெய்வமாக நம்பியிருக்கிறோம். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என கூறுவதை நாம் பார்க்கிறோம்.

ஜோதிடரை "தெய்வக்ஞன்" என வேதம் போற்றுகிறது. அந்த காலங்களில் மருத்துவருக்கு ஜோதிடமும் ஜோதிடருக்கு மருத்துவமும் தெரிந்திருக்கும். மருத்துவ ஜோதிடம் என்று ஜோதிடத்தில் இருப்பது இதற்கு சான்றாகும்

மருத்துவக் கல்வி பயில வைக்கும் ஜாதக அமைப்பு:

மருத்துவக் கல்வி பயில வைக்கும் ஜாதக அமைப்பு:

ஒருவர் மருத்துவத்துறையில் சேர்ந்து சாதிக்க வேண்டுமென்றால் மருத்துவத்தோடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.

1.ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்ம காரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.

2.இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.

3.மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும் பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் என போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.

5.ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.

ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றை குறிக்கின்ற கிரகம்.

6. மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது.

நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

மருத்துவ படிப்பு யாருக்கு?

மருத்துவ படிப்பு யாருக்கு?

1. மருத்துவ படிப்பிற்க்கு லக்னம் ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும். இவற்றில் உள்ள கிரகங்களை பொருத்து மருத்துவ பிரிவு அமையும்.

2. சூரியன், செவ்வாய், புதன் மற்றும் குருவின் தொடர்பு ஒன்று ஐந்து ஒன்பதாம் பாவங்களுக்கு ஏற்பட வேண்டும்.

3. மருத்துவராக தொழில் புரிய லக்னம் இரண்டாமிடம் ஆறாமிடம் பத்தாமிடம் ஆகியவை முக்கிய பாவங்களாகும்.

4. மருத்துவராகும் கிரக அமைப்பை பெற்று ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகத்தை கொண்டு அவர் எந்த பிரிவில் சேவை செய்வார் என்பதை அறியலாம்.

5.பட்டப்படிப்பு, மேல் படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் எல்லாம் ஒன்பதாம் இடத்தில் இருந்து முடிவு செய்யப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், இந்த மூன்று இடங்களுக்குரிய கிரகமும்தான் நமக்கு கல்வி செல்வத்தை தருகின்றன. மேலும் வித்யாகாரகன் என்ற புதன் கிரகம் மிகவும் முக்கியமானது. அத்துடன் வியாழன் என்ற குருவின் பலமும் மிகவும் அவசியம். இந்த அடிப்படை அம்சங்கள் பலமாக இருந்தால் உயர் கல்வி யோகம் சிறப்பாக அமையும்.

வைதீஸ்வரனும் மருத்துவ கல்வியும்:

வைதீஸ்வரனும் மருத்துவ கல்வியும்:

ஜாதகத்தில் அமைப்பிருந்துவிட்டாலும் மருத்துவ படிப்பிற்க்கு தெய்வ அருளும் வேண்டுமல்லவா? எந்த தெய்வத்தை வணங்கினால் மருத்துவம் படிக்கலாம்? வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அருள்மிகு வைத்யநாத ஸ்வாமிதாங்க!

வைத்தீஸ்வரன் கோவில்:

வைத்தீஸ்வரன் கோவில்:

காவிரி ஆற்றின் வடகரைப் பகுதியில் இருக்கும் சைவத்தலங்களில் முக்கியமான தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்கு வேளூர். அதன் இன்றையப் பெயர் வைத்தீஸ்வரன் கோவில். பெயரிலிருந்தே வைத்தியத்தோடு தொடர்புடய ஸ்தலம் என அறியலாம்.இது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்தலம் ஆகும். இப்ப தெரியுதா மருத்துவ படிப்பிற்க்கு செவ்வாயின் அருள் வேண்டும் என்பது. அங்கே உறையும் சிவனாரின் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்மனின் பெயர் தையல்நாயகி அம்மன். ஸ்தல விருட்சம் வேம்பு. அதாவது வேப்பமரம்.

புராண கதை

புராண கதை

செவ்வாயின் நாயகன் அங்காரகன் தனது அங்கத்தில் ஏற்பட்ட தொழுநோயை போக்கிக்கொள்ள இக்கோவிலில் உறையும் சிவனாரிடம் அடைக்கலம் அடைந்ததாகவும், நோய் நீங்கப்பெற்று உய்வு பெற்றதாகவும் வரலாறு. இறைவனுக்கு இங்கே வைத்தியநாதன் என்று பெயர்வந்ததற்கு முக்கிய காரணமே அந்நிகழ்வுதான்! அதை மனதில் கொள்க!

இக்கோவிலில் உறையும் சிவபெருமானை மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எப்பேர்ப்பட்ட நோய் இருந்தாலும் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே நோய்களால் வாடுபவர்கள், இத்தலத்திற்கு சென்று வரலாம்.

திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு, தன் சகோதரியின் அறிவுரையின் பேரில் இக்கோவிலுக்குச் சென்று வைத்தியநாத ஸ்வாமி என்னும் பெயர் பெற்ற சிவனாரை வணங்க, அதிசயத் தக்க முறையில் வயிற்றுவலி நீங்கிக் குணம் பெற, அன்றிலிருந்து அவர் இக்கோவிலின் அதீத பக்தரானார் என்பதும் வரலாறு!

ஆகவே மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களும் மருத்துவம் படித்துவிட்டு தொழில் தொடங்க நினைப்பவர்களும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று அருள்மிகு வைத்யநாத ஸ்வாமியின் அருள் பெற்று அதோடு மருத்துவத்தின் காரகன் அங்காரகனின் அருளையும் பெற்றால் மருத்துவ படிப்பும் தொழிலும் சிறப்பாக அமைந்து அத்துறையில் சாதிக்க இயலும் என்பது நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+