வாஸ்து நாளில் வாஸ்து பகவானுக்கும், சஷ்டியில் முருகனுக்கும் மஹா அபிஷேகம்
வாஸ்து தினம், சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூ
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 04.06.2018 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து தினத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும் நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும் மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முருக வழிபாடு
ஸ்ரீ முருக வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. ஸ்ரீ முருகருக்குரிய ஹோமங்களில் சத்ரு சம்ஹார ஹோமம் கைமேல் பலன் தரக்கூடியது. இந்த ஹோமத்தின் மூலம்தீயவற்றிலிருந்தும், எதிரிகளின் தொல்லையிலிருந்தும், நாம் பாதுகாப்பு பெறலாம், நம்முன்னோர்கள் மற்றும் கிரகங்களின் சாபங்களிலிருந்து நம்மை விடுவித்து தீயகர்ம வினை நீங்கிகுடும்ப வாரிசுகள், குடும்ப நல்லுறவு, கடன்களிலிருந்து விடுதலை பெற்று நலம் பெறலாம்.

சிறப்பு ஹோமம்
தடைகளை நீக்கி உங்கள் விருப்பங்கள் நிறைவேறவும், எதிரிகளை அழித்து வெற்றி காணவும்,ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் நீங்கள் உங்கள் லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்வில் நன்மை தரும் மாற்றங்களைக் காணவும், முருகனின் அற்புதமான சக்திகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தில் வியத்தகு மாற்றத்தை உணரவும், இந்த ஹோமம் வழிவகை செய்யும்.மேற்கண்ட ஹோமத்தில் பலவகையான மூலிகைகள், வாசனாதி திரவியங்கள், புஷ்பங்கள்மற்றும் நெய், தேன் சேற்க்கப்பட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையுடன் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.

நவகிரக ஹோமம்
5.6.2018 செவ்வாய் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகம் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ சுக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.

தம்பதிகள் பூஜை
05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜை நடைபெற உள்ளது. 06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம்,நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெறும், மதியம் 12.00க்கு சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி நடைபெற்று, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிமுதல் அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்கலசாபிஷேகம் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications