Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேச்சில் இனிமை தரும் சுக்கிரன்

இனிமையாக பேச வேண்டும் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதற்காக வாயில் ஸ்வீட் சாப்பிட்டுக்கிட்டே பேசணுமான்னு எடக்கா கேட்காதீங்க. இனிமையாக பேச வேண்டும். இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர் சுக்கிரன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாக்கு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான். மனிதர்களின் மிக முக்கியமான ஆயுதம் நாக்குதான். அதை விளக்க ஒரு அற்புதமாக கதை ஒன்று உள்ளது. கதையுடன் இன்றைய சுக்கிரவார பதிவை பார்க்கலாம்.

இனிமையும்... கசப்பும்

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.

மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர். ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.

வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான். குரு அவனைப் பார்த்து நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார். சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான். அதனுள் மனிதனின் நாக்கு தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது . குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,

சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது? கலைவாணி குடியிறுப்பு நாவில் என்று வேதம் கூறுகிறது . மனிதனை தேவன் ஆக்குவது குருவின் அருள் நாவன்றோ. ஆகவே அதுவே இனிமையான பொருள் என்றான் .

குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார் .

சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.

குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதனுள் மனிதனின் நாக்கு தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது . குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் , நாக்கை
வரைந்து கொண்டு வந்தாய். கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை வரைந்து கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.

சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். மனிதன் அழிந்துபோகிற உலகத்தைப் பற்றியே பேசி ,
கடைசியில் கசப்பு ஜல தீட்டு வெளியாகி , மரணம் அடைகிறான் . எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான். சீடனின் அறிவைக் கண்டு வியர்ந்த குரு தான் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.

கதை முடிந்தது... இனி ஜோதிடத்தில் நாக்கின் அதிபதி பற்றி தெரிந்து கொள்வோம்.
நீங்க ரொம்ப புத்திசாலியாகிட்டிங்க. ஆமாங்க. அவரேதான். நீங்க நினைத்த சுக்கிரனேதான் நாக்கிற்கும் காரகர். நல் வாக்கிற்கும் காரகர்.

நாக்கு நன்றாக இருந்தால்தான் வாக்கு நன்றாக அமையும். ஒருவருக்கு நாவன்மையும் பேச்சுதிறனும் சிறப்பா அமையனும்னா அதுக்கு சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும்.

சொல்வாக்கும் செல்வாக்கும் சிறப்பாக அமைய கிரக நிலைகள்:

சொல்வாக்கும் செல்வாக்கும் சிறப்பாக அமைய கிரக நிலைகள்:

1. லக்னம் ஜன ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும்
துலாமாக இருப்பது.

2. லக்னத்திலேயே சுக்கிரன் ஆட்சி பலத்துடன் இருப்பது.

3.கால புருஷனுக்கு இரண்டாம் வீடு மற்றும் வாக்கு ஸ்தானமான ரிஷபம் ஜாதகத்தில் இரண்டாம் வீடாக அமைவது.

4. ஜாதக இரண்டாம் வீட்டு அதிபனும் கால புருஷனுக்கு இரண்டாம் வீட்டு அதிபனும் சுப தொடர்பில் இருப்பது.

5. சுக்கிரன் ஆட்சி உச்சம் ,திக்பலம் மற்றும் மாளவியா யோகம் போன்ற சுபயோகங்களை பெறுவது.

6. சுக்கிரன் அல்லது வாக்குஸ்தானாதிபதி பல வர்க சக்கரங்களில் வர்கோத்தமம் பெறுவது.

7. சுக்கிரன் அல்லது இரண்டாமதிபதி 6/8/12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது.

8. வாக்கு ஸ்தானம் அல்லது ரிஷபம் ஆகிய இடங்களில் ராகு/கேது சேர்க்கை/தொடர்பு இல்லாமல் இருப்பது.

9. வாக்கு ஸ்தானத்திற்க்கு இயற்க்கை சுபர்கள் தொடர்பு கொள்வது.

10. வாக்கு ஸ்தானம் அல்லது ரிஷபத்தில் 30க்கு மேல் அஷ்டவர்க பரல்கள் பெற்று பலமடைவது.

11. மேஷ லக்னமாகி லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்று அதற்க்கு இரண்டில் சுக்கிரன் ஆட்சி பெற்று வெசி யோக அமைப்பை பெறுவது.

12. காலபுருஷனுக்கு வாக்கு ஸ்தானாதிபதியான சுக்கிரன் கன்னியில் நீச பங்கமடைந்து சந்திர கேந்திரத்திலும் நின்று நீச பங்க ராஜயோகம் பெறுவது.

13. சுக்கிரனோ அல்லது வாக்கு ஸ்தானாதிபதியோ நீசம் அல்லது வக்ரமடையாமல் இருப்பது.

ஒருவரின் இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் கிரகத்தைப் பொருத்து அவருக்கு நல்ல பேச்சுத்திறமை அமையும்.

வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்களும், பலன்களும்:

வாக்கு ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்களும், பலன்களும்:

சூரியன் நின்றால் அதிகாரமான பேச்சு.

சந்திரன் நின்றால் பெண்மையோடும் மென்மையோடும் பேச்சு அமையும்.

செவ்வாய் நின்றால் ஆனவமான பேச்சு

புதனிருந்தால் எதற்கெடுத்தாலும் கணக்குகளோடும் புள்ளி விவரத்தோடு பேச்சு. சில நேரங்களில் நயவஞ்சகமான பேச்சு
குரு இருந்தால் நேர்மையோடும் ஆன்மீகத்தோடும் கலந்த பேச்சு

சுக்கிரன் இருந்தால் இனிமையான ஜென ரஞ்சகமான பேச்சு
சனி இருந்தால் பழமை குறித்த பேச்சு. வாக்கு ஸ்தானங்களில் சனி இருப்பவர்கள் அரசியலிலோ ஆன்மிகத்திலோ புகழ்பெற்று திகழ்கிறார்கள்
வாக்கு ஸ்தானத்தில் ஸர்ப கிரகங்களான ராகு/கேது நிற்பவர்கள் ஒன்று அளவுக்எதிகமாக பேசுவார்கள் அல்லது சுத்தமாக பேசவே மாட்டார்கள்.

இனி சுக்கிரனால் சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்றவர்கள் மற்றும் வாக்கு ஸ்தானம் கெட்டவர்களின் உதாரண ஜாதகங்களை பார்ப்போம்.

மடை திறந்த வெள்ளம் போல் தனது பேச்சால் அனைவரையும் கட்டிபோடும் திறன்கொண்ட சிறந்த சொற்பொழிவாளரான அறிஞர் அண்ணா அவர்களின் ஜாதகத்தில் ஜென வசிய ராசியான துலா லக்னமாகி லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பலம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் கேது நின்று கால புருஷ வாக்கு ஸ்தானமான ரிஷபத்தில் ராகு நிற்பதை பாருங்கள்!

என்றென்றும் இவருடைய பேச்சு தெய்வத்தின் குரல் என போற்றப்படும் மகா பெரியவர் அவர்களின் ஜாதகத்தில் சிம்ம லக்னமாகி வாக்கு ஸ்தானத்தில் சனியும் கேதுவும் நின்று உச்சம் பெற்ற சுக்கிரன் ராகுவோடு சேர்ந்து வாக்கு ஸ்தானத்தில் நிற்பதும் லக்னாதிபதி மற்றும் வாக்கு ஸ்தாடாதிபதியும் குருவுடன் சேர்ந்து கால புருஷ வாக்கு ஸ்தானத்தில் நிற்பதை பாருங்கள்!

விஜயகாந்த் ஜாதகம்

விஜயகாந்த் ஜாதகம்

கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிக லக்னமாகி லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று வாக்கு ஸ்தானாதிபதி குரு ஷஷ்டாஷ்டகமாக நின்று கால புருஷ வாக்கு ஸ்தானாதிபதி சுக்ரன் பகைவனுடன் சேர்ந்து பகை வீடான சிம்மத்தில் நிற்கும் ஜாதக அமைப்பை பெற்ற திரு விஜயகாந்தின் பேச்சை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

சல்மான்கான்

சல்மான்கான்

சிலருக்கு அவர்களின் பேச்சே எதிரியாகிவிடும். அது போன்ற ஜாதக அமைப்பை கொண்ட சல்மான் கானின் ஜாதகத்தில் மேஷ லக்னமாகி வாக்கு ஸ்தானத்தில் ராகு நிற்கும் அமைப்பை பாருங்கள்.

நரசிம்மராவ்

நரசிம்மராவ்

கால புருஷனுக்கு 6ம் வீடான கன்னி லக்னமாகி வாக்கு ஸ்தானத்தில் ராகு நின்று கால புருஷ வாக்கு ஸ்தானாதிபதி சுக்ரன் கேதுவுடன் சேர்ந்து நிற்க்கும் அமைப்பை பெற்ற திரு பி.வி. நரசிம்மராவ் அவர்கள் பேசி சிரித்து பார்த்தவர்கள் பாக்கியசாலிகள்.

ஓபராய்

ஓபராய்

இரண்டாமிடம் என்றால் வாக்கு ஸ்தானம் மட்டுமல்ல. சுவையோடும் நாவோடும் தொடர்புடைய போஜன ஸ்தானத்தையும் குறிப்பது இரண்டாம் வீடுதான். போஜனம் என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது ஹோட்டல்தான். ஹோட்டல் தொழிலால் சொல்வாக்கும் செல்வாக்கும் பெற்ற எம்.எஸ் ஓபராய் அவர்களின் ஜாதகத்தில் ஜென வசிய ராசியான ரிஷப லக்னமாகி அதன் அதிபதி சுக்ரன் தன வாக்கு ஸ்தானத்தில் நிற்பதை பாருங்கள்!

இளவரசி டயானா ஜாதகம்

இளவரசி டயானா ஜாதகம்

அதிகமாக உணவு உட்கொள்ளும் தன்மையை தரும் சாப்பிடுவதில் பிரச்சினை உடைய நோயை கொண்ட இளவரசி டயானா ஜாதகத்தில் மகர லக்னமாகி வாக்கு தன போஜன ஸ்தானத்தில் கேது நின்று கால புருஷனுக்கு இரண்டாம் வீடான ரிஷபத்தில் சுக்ரன் ஆட்சி பெற்று நிற்பதை பாருங்கள்.

வாக்குவன்மை பெற பரிகார ஸ்தலங்கள்

வாக்குவன்மை பெற பரிகார ஸ்தலங்கள்

தொண்டை மண்டலப் பகுதிகளில், இன்றளவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சின்னக் குழந்தைகள், பேச வேண்டிய பருவத்தில் பேசாமல் இருந்தாலோ, சரியாகச் சொற்கள் வராமல் திக்கித் திணறினாலோ அவர்களுக்காக திருக்கபாலீஸ்வரத்தில் இருக்கும் வாயிலார் சந்நிதிக்கு வருவதாக நேர்ந்து கொண்டால், அந்தக் குழந்தைகள் பேசத் தொடங்குவார்களாம்! சிலர், தங்களையே ஆதாரங்களாகக் காட்டி விளக்குகிறார்கள்!

சுக்கிரன் பரிகார தலங்கள்

சுக்கிரன் பரிகார தலங்கள்

இனிய பேச்சு திறனும் குரலும் பெற சுக்கிர ஸ்தலஙகளான கஞ்சனுர், ஸ்ரீரங்கம், திருமயிலை எனப்படும் மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயில் ஆகியவை சிறந்த ப்ரார்தனை மற்றும் பரிகார ஸ்தலங்களாகும். சிறந்த வாக்கு வண்மை பெற கூத்தனுர் சரஸ்வதி கோயிலுக்கு செல்வதும் சிறந்ததாகும்.

மிட்டாய் பிரசாதம்

மிட்டாய் பிரசாதம்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி சாலையில் 2வது கிமீ தூரத்தில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு சுவாமி முருகன் தங்கி பழனி சென்றதாக கூறப்படுகிறது. முருகன் இங்கு குழந்தையாக காட்சி அளிப்ப தால் 'குழந்தை வேலப்பர் கோயில்' என அழைக்கப்படுகிறது. குழந்தை முருகன் அல்லவா? பாசத்துடன் ஒரு மிட்டாயையும் பக்தர்கள் தந்து விட்டு செல்கின்றனர். பேச்சு வராத குழந்தைகளுக்காக பிரார்தனை செய்து மிட்டாய் வழங்குவது இத்தல சிறப்பு

-அஸ்ட்ரோ சுந்தர ராஜன்
(9498098786)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+