பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Recommended Video

சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா மூலவருக்கு முன்பு உள்ள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு, தற்பைப் புல் அலங்காரம் செய்து கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விநாயகா் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நாள்தோறும் விநாயகா் பெருமான் பல்வேறு வானத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். எட்டாம் நாள் திருவிழா நாளன்று வருடத்துக்கு ஒரு முறை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்றைய தினம் மாலையில் தேரோட்டம் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தியன்று 16 படி அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருள்களைக் கொண்டு ராட்சத கொலுக்கட்டை செய்து விநாயகருக்கு படையல் செய்த பிறகு, சதுர்த்தி விரதம் இருந்த பக்தர்களுக்கு அந்தக் கொலுக்கட்டை பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications