ஆட்சியாளர்களுக்கு சிக்கல்? இயற்கை சீற்றம் ஏற்படும்? கோவில் யானை பாகனை கொல்வது கெட்ட சகுனம்?

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக ஆன்மீக ரீதியாக என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. இது எதற்கான சகுனம் என்று இங்கே பார்க்கலாம்.

நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் பலியாகி உள்ளனர். இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியாகி உள்ளனர்.

thiruchendur thoothukudi elephant

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த யானையை ஆய்வு செய்தார். மாவட்ட வன அலுவலர் அளித்த பேட்டியில், பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது

கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம் ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.

நடந்தது என்ன?: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.

அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது. அப்போதுதான் இந்த மரண சம்பவம் நடந்துள்ளது.

ஆன்மீக சகுனம்: கோயில் யானை மிதித்து பாகன் இருவர் உயிரிழந்த நிலையில், கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக ஆன்மீக ரீதியாக என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. இது எதற்கான சகுனம் என்று இங்கே பார்க்கலாம்.

1. பொதுவாக கோவில் யானை மரணம் அல்லது கோவில் யானை ஒருவரை கொல்வது என்பது கெட்ட சகுனம் ஆகும்.

2. இயற்கை சீற்றங்கள், பாதிப்புகள், மனித சக்திக்கு மீறிய பாதிப்புகளை இது உணர்த்தும்.

3. ஒழுங்கற்ற நிலை என்பதையே இது காட்டும்.. அதாவது.. உலகில் ஒரு ஒழுங்கு இருக்காது. பெரும்பாலும் இயற்கையில் மாறுபாடு ஏற்படலாம்.. அல்லது மனித இயல்பில் மாறுபாடு அதாவது தீவிரவாத தாக்குதல்கள் போன்றவை ஏற்படலாம்.

4. விபத்துகள் பெரிதாக நடக்கும்.. ஏன் ஆட்சியாளர்களுக்கும் கூட இதனால் சிக்கல் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+