Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே 4ம் தேதி ஸ்டார்ட்.. 'அக்னி நட்சத்திரம்' என்றால் என்ன ஜோசியமும், வானிலையும் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் வரும் மே 4ம் தேதி தொடங்குகிறது.சரி அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? வானிலை விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள். ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்கி வரும் மே 28ம் தேதி வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும். அக்னி வெயில் மண்டையை பிளக்குது. கத்தரி வெயில் கண்ணை கட்டுது என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

அக்னி நட்சத்திரம் குறித்து ஜோதிடத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21-ம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை இருக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

What does agni nakshatram mean in astrology and what does the weather say?

ஜோதிட சாஸ்திர கணிப்புப்படி பொதுவாக 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலகட்டம் இருக்கும். இவை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்கத் தொடங்கும். மத்தியில் இருக்கும் 7 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடைசி 7 நாட்களில் மெதுவாக வெப்ப அளவு குறைந்து இயல்புநிலைக்குத் திரும்பும் என்பது ஜோதிடத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். இதன்படியே இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை 25 நாட்கள் அக்னி வெயில் இருக்கும் என்கிறார்கள்.

அஸ்வினி, மகம், மூலம்,உத்திரம், உத்திராடம், ரோகிணி,புணர்பூசம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, உத்திரட்டாதி உள்பட மொத்தம் 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்துக்கும் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் கிடையாது. ஆனாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அதனால் அந்த காலக்கட்டத்தில் சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்படுகிறது.

சித்திரை, வைகாசி மாதங்களில் உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வதாக ஜோதிடத்தில் சொல்கிறார்கள் . இதன்படி, தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்து விடுகிறார். இந்த காலக்கட்டத்தில் வெயில் கடுமையாக இருக்கும்.

அக்னி நட்சத்திரத்தில் சிலர் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்றே சொல்வார்கள். ஆனால் சிலர் சுபசெயல்களை நடத்தலாம் என்றும் சொல்கிறார்கள். திருமணம், சீமந்தம், சத்திரங்கள் கட்டுதல், உபநயனம், பரிகார வேள்விகள் ஆகியவற்றை அக்னி நட்சத்திரக்காலத்தில் செய்யலாம். ஆனால், வீடு கட்டுவதற்கான நிலம் வாங்குவதைத் தவிர்க்கலாம். தோட்டம், மலர்ச் செடிகள், குளங்கள், குட்டைகள் வெட்டுவது மரங்களை வெட்டுதல், நார் உரித்துக் கயிறு செய்தல், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உருவாக்குதல் ஆகியவற்றை செய்ய வேண்டாம் என்கிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக அக்னி நட்சத்திரம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம். அக்னி நட்சத்திரம் என்ற பதத்தை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதில்லை. ஜோதிட சாஸ்திரம் கொடுத்த வார்த்தை இது. 'அக்னி நட்சத்திரம் என்றோ கத்திரி வெயில் என்றோ வானிலையில் இல்லை. அது மூட நம்பிக்கை என்றும் சொல்லவில்லை. அதுபற்றி பேச விரும்பவில்லை' என சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் பாலச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

What does agni nakshatram mean in astrology and what does the weather say?

பூமியானது 23.5 டிகிரி சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக்காலம் குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாக உள்ளது. சூரியனின் கதிர்கள் எந்த இடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும்.

பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரியன் தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் நமக்கு தெரியும். அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருந்து அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பிக்கும். வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் சூரியன் ஜூன் 21 ஆம் தேதி வாக்கில் கடக ரேகைக்கு( 23.5 வடக்கு அட்ச ரேகை) நேர் மேலே இருக்கும்.

சூரியன் பிறகு தெற்கு நோக்கி அதாவது பூமியின் நடுக்கோட்டை நோக்கி நகர ஆரம்பிக்கும். இதன் விளைவாக சூரிய வெயில் காரணமாக வெப்பம் அதிகமாக இருக்கிறது. பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் கோடையாக இருக்கும் போது நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் என்பதே அதற்குக் காரணம் ஆகும். சரி விஷயத்திற்கு வருவோம். கோடைகாலத்தின் இறுதிபகுதி என்பதால் அக்னி நடத்திர காலம் என்று அழைக்கப்படும் காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+