சனிப்பெயர்ச்சி 2025: கிளைமேக்ஸில் ஏழரை சனி.. கும்ப ராசி கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்
சனிப்பெயர்ச்சி 2025: சனிப்பெயர்ச்சியில், சனி பகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பயணிக்கிறார். ஒன்பது கோள்களில் சனிப்பெயர்ச்சி தான் அதிக ஆளுமை செய்யும் என்பதால் அதன் மாற்றங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏழரை சனி நடைபெறும் கும்ப ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.
கும்ப ராசியைப் பொருத்தவரை இதுவரை ஜென்மத்தில் இருந்த சனி பகவான், தற்போது ராசிக்கு இடம் என்று சொல்லக்கூடிய தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாகிய மீன ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். ஐடி, நிதித்துறை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கும்ப ராசிக்காரர்கள் தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான செலவுகள், நஷ்டங்களை நீங்கள் சந்தித்து விட்டீர்கள். குடும்பத்தில் மனகசப்புகள் வந்து செல்லும்.
முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்காமல் போயிருக்கும். யாரை நம்பி முதலீடு செய்தீர்களோ அவர்களாலேயே பாதிக்கப்பட்டிருப்பீர்கள். கடன் மட்டும் உங்களுக்கு மிச்சம் இருக்கும். இரண்டாம் இடம் என்பது வாக்கு ஸ்தானம் என்பதால் வாக்குகள் கொடுப்பதால் பிரச்னைகள் ஏற்படும். நாம் கொடுக்கக்கூடிய வார்த்தைகள் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு கையில் இருக்கும் முதலீட்டை கரைக்காமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும். வெளிநாட்டு தொடர்பில் இடையூறு ஏற்படும். இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய சனி மூன்றாம் பார்வையாக நான்காம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனம், தாய் விஷயத்தில் ஏதாவது பிரச்னை ஏற்படும். உதவப் போன இடத்தில் பிரச்னையில் மாட்டிக் கொள்வீர்கள்.
எதற்கு, எவ்வாறு பேசுகிறோம் என்பதை கவனித்து பேச வேண்டும். இந்த விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. பற்கள், அடிவயிறு, முதுகு வலி ஆகியவற்றில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லக்னத்தில் ராகுவும், ஏழாம் இடத்தில் கேதுவும் இருப்பதால் வீண் வம்புகளை தவிர்ப்பது நல்லது.
அவ்வப்போது குழப்பங்கள் வந்து செல்லும். அதனால் எந்த விஷயத்திலும் ஆலோசித்து முடிவுகள் எடுங்கள். பொருளாதாரம் பெரிய சிக்கலை ஏற்படுத்தாது. வரவு செலவு சரியாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் அதை சமாளிப்பதற்கான ஆற்றலும் கிடைக்கும்.
ஏழரை சனியின் கடைசி காலத்தில் இருந்தாலும், ராசியில் குரு பார்வை வருகிறது. அதனால் சில நன்மைகள் நடக்கும். 11வது இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பணத்தில் பெரிய நெருக்கடி இருக்காது. கவலைகள் நீங்கி மன நிம்மதியும் கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இதுவரை எந்தப்போக்கில் போனீர்களோ அதே வழியில் செல்வது நல்லது. தெரியாத ஒரு விஷயத்தில் குழந்தைகளை படிக்க வைப்பது பிரச்னைகளை உருவாக்கும்.
பெண்கள்: திருமணம் வரன் விஷயத்தில் கவனமாக, யோசித்து முடிவு எடுக்க வேண்டும். இரண்டாம் இடம் குடும்ப ஸ்தானம். இரண்டாம் இடத்தில் உள்ள சனி பகவான் குடும்ப வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். அதனால் கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம்: மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு அன்னதானம் செய்யலாம். கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்வதால் ஏழரை சனியின் தாக்கம் குறையலாம். சுதர்சன யாகம் செய்யலாம். மகாவிஷ்ணு, நரசிம்மர், ஆஞ்சிநேயரை வழிபடலாம்.












Click it and Unblock the Notifications