வருடத்தின் கடைசி 3 மாதங்கள்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்? இந்த வருடம் எப்படி முடியும் தெரியுமா?
சென்னை: 2024 வருடம் முடிய இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் உள்ளன. இந்த 3 மாதங்கள் மேஷ ராசிக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
அக்டோபர் மாதம்: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். இதனால் மேஷ ராசிக்கு பணம் சேரும். புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். காதல் கைகூடும்.

நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும். ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம் அவசியம். முக்கியமாக வெளியே சாப்பிடும் போது கவனமாக இருக்கவும்.
பொதுவாக நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அன்பை வாரி வழங்குவீர்கள். முக்கியமாக காதல் அதிகம் கொண்டவர்கள். காசு கொஞ்சம் இருந்தாலும் காதலர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள். இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்பு அடையாமல் பார்த்துக்கொள்ளவும்.
நவம்பர் மாதம்: நவம்பரில் உங்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. தூரத்து இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் நடிப்பு, அரசியல், மேலாண்மை அல்லது தொழில்முனைவு போன்ற பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருக்கும் துறைகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம்
பொதுவாக நீங்கள் மற்றவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர்கள் மற்றும் திட்டங்கள் அல்லது குழுக்களின் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது சிறந்து விளங்குவீர்கள். அதன்படி உங்களுக்கு தலைவர் பொறுப்புகள் வரலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக் செல்லவும். ஜுரம் உள்ளிட்ட பாதிப்புகள் அடிக்கடி வரலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில்கே கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம்.
டிசம்பர் மாதம்: இந்த மாதம் உங்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் அதிகம் ஏற்படும். உடல் பாதிப்புகள் வாட்டி எடுக்கும். மர்ம காய்ச்சல்கள் ஏற்படலாம். மூச்சு பாதிப்புகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
இடம் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புத்திதான் கொஞ்சம் அவ்வப்போது கோளாறு செய்யும். புதிதாக இடம் வாங்க வாய்ப்புகள் உண்டாகும். லோன் எடுக்க பயப்பட வேண்டாம். துணிந்து இறங்குங்கள்.
நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். துணிந்து செல்லுங்கள். 3. வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications