தொட்டதெல்லாம் துலங்கும்.. குபேர யோகமாக அடிக்கும்.. இந்த 5 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி ஜாக்பாட்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.

மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் கீழ்காணும் 5 ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

What will happen to these 5 Rasis in Guru peyarchi palan 2024

மேஷ ராசிக்கு நடக்கும் நல்லது: இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதாரம் அடியோடு மாறப்போகிறது. கடனை எல்லாம் அடைக்க போகிறீர்கள். சுப செலவுகளை செய்ய போகிறீர்கள். சொந்த நிலம், வீடு என்று வாங்க போகிறீர்கள். அவருக்கு புதுப்பணம் வந்து இருக்கிறது என்று கமெண்ட் அடிப்பார்களே.. அப்படி புதுப்பணம் வந்தவர் போல உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது. அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். உங்களுக்கு வீடு, ஆரோக்கியம், குடும்ப நலம், திருமணம், பணம், என்று எல்லாம் கொட்ட போகிறது. குபேர யோகம் அடித்துவிட்டது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு குபேர யோகம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 11வது வீட்டில் இருப்பதால் அடிக்க போகிறது.

கன்னி ராசிக்கு நடக்கும் நல்லது:இதுவரை 8ல் இருந்த குரு இப்படி உங்களை போட்டு தாக்கிக்கொண்டு இருந்தார். இனிமேல் அவர் உங்கள் ராசிக்கு 9ல் இருக்க போகிறார். அதோடு உங்கள் ராசியை பார்க்க போகிறார். இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கு உயரும்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது.

விருச்சிகம் ராசிக்கு நடக்கும் நல்லது: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்டது விருச்சிகம். இந்த குரு பெயர்ச்சியில் ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் விருச்சிக ராசிக்கு எல்லாம் நல்லதே நடக்க போகிறது.

இந்த வருடமே வீடு கட்டுவீர்கள். மே மாதமே நிலம் வாங்கும் வாய்ப்பு இருக்கும். தொட்டது துலங்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகி நல்லதே நடக்க தொடங்கும். பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு ராசிக்கு நடக்கும் நல்லது: மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் தனுஷ் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம். இந்த குருபெயர்ச்சி மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செல்வாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள்.

கும்பம் ராசிக்கு நடக்கும் நல்லது:: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் களமிறங்குகிறார். 4ம் வீட்டில் குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது.

உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது. புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. இதை தொழில்ஸ்தானம் என்பார்கள். இங்கே பார்வையிடுவதால் உங்கள் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது. உங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+