கால் விரலில் மெட்டி அணிவதன் ரகசியம் - இதுல இவ்ளோ விசயம் இருக்கா
சென்னை: பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது. முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுவதாக அறிவியல் உண்மை கூறுகிறது. நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர்.
ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டிதான். நெற்றி உச்சி வகிட்டில் பொட்டு வைத்திருப்பார். கழுத்தில் மாங்கல்யம், கால்களில் மெட்டி அணிவது கூட அடையாளம் என்பதை விட ஆரோக்கியம் உள்ளது என்பதை உணர்ந்துதான்
அதை அணியச் சொல்கின்றனர்.
கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை முக்கியமாக கர்ப்பிணி பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர். ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது.

பொட்டு வைத்த முகம்
திருமணமான பெண்கள் மட்டுமல்ல சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பொட்டு வைக்க வேண்டும். பொட்டு வைத்த முகத்திற்கு கூடும் யாராலும் மெஸ்மரிசம் செய்ய முடியாது. பொட்டு வைத்த முகத்திற்கு அழகு கூடுவதோடு பாதுகாப்பும் அதிகமாகும்.

நெற்றிச்சுட்டி
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரியாகும். காதுகளில் தோடு போட்டால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும். மோதிரம் போட்டால் பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. எனவே திருமணமானவர்கள் மட்டுமே மோதிரவிரலில் மோதிரம் போடுவது.

மூக்குத்தி
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது தொடர்பான நோய்கள் குணமாகும். மூக்குத்தி உஷ்ண வாயுவையும் வெளியேற்றுகிறது. மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வயிற்று சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

வங்கி வளையல்
கைகளில் தோள்பட்டைக்கு கீழே முழங்கைக்கு மேலே இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம் படபடப்பு,பயம் குறைகிறது. மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்வு கூறுகிறது. மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் சீராகிறது.
கைகளில் வளையல்கள் அணிவதன் மூரம் அந்த பகுதியின் புள்ளிகள் அழுத்தப்படுகின்றன. இதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் சரியாக உள்ளது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
இதற்காகவே கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துகின்றனர்.

ஒட்டியாணம்
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் . ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மெட்டியும் கொலுசும்
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். உடம்பில் உள்ள பாலியல ஹார்மோன்கள் தூண்டும். கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

அழகுக்கு அழகு சேருங்கள்
பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும். ஆகவே
மனைவிகளுக்கு இதையெல்லாம் போட்டு அழகுபடுத்துங்க இல்லாள் அழகோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் உங்க இல்லம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதானே.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications