October Matha Palan: ரிஷப ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சுக்கிரனால் லக்
ரிஷபம் ராசி பலன்: 2025 அக்டோபர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. இந்த கிரகங்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் நிறைவடைந்து அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில் சுக்கிரன் இந்த மாதம் நீச்சம் எனும் பலவீன நிலையை அடைகிறார். புதன் பகவான் மாறினாலும் குருவின் பார்வையில் வருகிறார். இந்த மாதம் பெரும்பால நாட்களில் செவ்வாய் குருவின் பார்வையிலேயே சுப அமைப்பில் நல்லவிதமாக இருக்கிறார்.

அதிசாரம் என்கிற முறையில் குரு பகவான் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி உச்சம் என்கிற நிலைமையை அடைகிறார். ஏறத்தாழ 50 நாட்களுக்கு கடகத்தில் உச்சம் என்கிற நிலையை அடைவது 12 ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். கெடுதல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு கெடுதல் நிற்கக்கூடிய நிலைமை உண்டாகும்.
ஒன்றுமே நல்லவை நடக்கவில்லை என்பவர்களுக்கு ஓரளவு நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். 12 ராசிக்காரர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மையைத் தரும் அமைப்பில் இந்த அக்டோபர் மாதம் அமையும். பெரிய அளவில் தீமைகள் எதுவும் தரும் அமைப்புகள் இல்லை. அந்த வகையில், இந்த அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பெறப்போகும் நன்மைகள், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2, 11 ஆம் இடங்களில் குரு சனி இருக்கிறது. இந்த மாதம் கொஞ்சம் முன், பின் தான் இருக்கும். கிணற்றில் போட்ட கல் மாதிரி உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் இருக்கும். இழுபறியான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் நீச்சமடையும் காலம் என்பதால் இந்த மாதத்தின் கடைசி வரை அவர் பலவீனமாகப் போகிறார். அதனால், எடுத்த காரியங்களில் தடைகளைச் சந்திப்பார்கள்.
தடை ஏற்படும்
மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் கருத்து மோதல், ஏன் தான் வேலைக்குச் செல்கிறோம் என்கிற சூழல் இருக்கும். வியாபாரிகள், தொழில்முனைவோருக்கு வியாபாரம் நடக்கும். ஆனால் பெரிய லாபம் கிடைக்காது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்கிற நிலை ஏற்படும்.
சுக்கிரன் நீச்சம்
விவசாயப் பெருமக்களுக்கு மழை பெய்தாலும் பிரச்சனை, பெய்யாவிட்டாலும் பிரச்சனை என்கிற நிலைமை ஏற்படும். 4 ஆம் அதிபதி மாதத்தின் பிற்பகுதியில் நீச்சம் என்கிற பலவீன நிலையை அடைப்பதால் அம்மா, வாகனம், சுகம் சார்ந்த விஷயங்களில் சில விரையங்கள் ஏற்படும். இருப்பினும் 11 ஆம் இடத்தில் சனி இருப்பது எல்லாவற்றையும் பாதுகாக்கிற அமைப்பு உண்டாகும்.
பணவரவு கொட்டும்
அக்டோபர் 18 ஆம் தேதி வரை 2 ஆம் இடத்தில் குரு வலிமையாக இருப்பதால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. டென்ஷன்கள் பெரிதாக இருக்காது. இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் மனது இப்படி இல்லை என்கிற கவலை இருந்து கொண்டே இருக்கும். மனது கவலைக்குள்ளாகும் நிலை இருந்துகொண்டே இருக்கும்.












Click it and Unblock the Notifications