Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓணம் பண்டிகை..ஹஸ்தம் தொடங்கி திருவோணம் வரை கோலாகலம்..மகாபலி மன்னனை வரவேற்க தயாராகும் கேரளா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அறுவடைத் திருவிழாவான ஓணம், கேரள மாநிலத்தில் மிகுந்த கோலாகலத்துடனும், உற்சாகத்துடனும் பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்துகிறது.இன்றைக்கும் தமிழ்நாட்டில் மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை இன்று முதல் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கானம் விற்றேனும் ஓணம் கொண்டாடு என்பது மலையாள பழமொழி. வசதி-வாய்ப்பற்றவர்கள் தங்கள் வீடுகளில் உணவுக்காக சேமித்து வைத்திருக்கும் கானப்பயறை விற்றாவது ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது இதன் பொருளாகும். இதில் இருந்து ஓணம் பண்டிகைக்கு கேரள மாநில மக்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் என்பது நமக்கு புலப்படுகிறது.

கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை மட்டும் கேரள மக்கள் உலகமெங்கும் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடுகிறார்கள் என்பதுதான் தனிச்சிறப்பு. ஆண்டுகள் தோறும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட இந்த பண்டிகை கொரோனாவால் 2 ஆண்டுகள் களையிழந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழைய உற்சாகத்தை மீட்டெடுத்து கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன.

10 நாட்கள் பண்டிகை

10 நாட்கள் பண்டிகை

கொல்லம் ஆண்டான மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (தமிழ் மாதமான ஆவணியில்) ஓணம் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பருவமழைக் காலம் முடிந்து எங்கும் பசுமையாக இருக்கும் காலத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கிறார்கள். மலையாள மாதமான சிங்கம் மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒருகாலத்தில் ஒரு மாத காலம் வரை கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை தற்போது 10 நாட்களாக சுருங்கியுள்ளது. மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாட கேரள மாநில அரசு 10 நாட்கள் விடுமுறையும் அளித்து வருகிறது.

 அத்தப்பூ கோலம்

அத்தப்பூ கோலம்

முன்னொரு காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் பொற்கால ஆட்சியைக் கொண்டாடுகிறது. இந்த 10 நாட்கள் கொண்டாட்டங்களின் கலவையாகும். ஓணம் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அத்தப்பூ கோலமாகும். இந்த விழாவின் சிறப்பம்சமே இதுதான். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்படுவது அத்தப்பூ என்ற பூக்கோலமாகும். கேரளாவில் சிங்கம் மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இந்த காலத்தில் வரும் ஓணம் பண்டிகையை மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.

பத்து நாட்கள் பண்டிகை

பத்து நாட்கள் பண்டிகை

ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்து நாட்களும் அத்தப்பூ கோலங்கள் போட்டு அலங்கரிப்பார்கள். இந்த நாளில் ஓணத்தப்பன் என்று மலையாள மக்களால் அழைக்கப்படும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பல்வேறு வண்ணங்களைக் கொண்ட மலர்களால் கோலமிடுவார்கள். இதற்கு அத்தப்பூ கோலம் என்று பெயர். அத்தப்பூ கோலத்தில் தும்பை, காசி, அரளிப்பூ, தாமரை, மல்லி, கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு பூக்கள் இடம் பெறும்.

ஹஸ்தம் - ஆகஸ்ட் 30, 2022

ஹஸ்தம் - ஆகஸ்ட் 30, 2022

மகாபலி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பும் நாள் அத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. அத்தச்சமயம் எனும் பிரமாண்ட ஊர்வலங்கள் வாமனமூர்த்தி திருக்கர கோயில் மற்றும் கொச்சி முழுவதும் நடைபெறுகின்றன. ஓணத்தின் சிறப்பு பூக்களத்தில் எனும் பூக்கோலம். அதில் அத்தாப்பூ எனப்படும் முதல் அடுக்கு மஞ்சள் இதழ்களால் ஆன பூக்களால் போடப்படுகிறது. மக்கள் ஓணத்தின் ஒவ்வொரு நாளும் கோலத்தின் அடுக்குகளைச் சேர்கின்றனர்.

சித்திரை - ஆகஸ்ட் 31, 2022

சித்திரை - ஆகஸ்ட் 31, 2022

திருவிழாவின் இரண்டாவது நாளில், பூக்களத்தில் மேலும் இரண்டு அடுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள மலையாளிகள் சித்திரை அன்று கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

சுவாதி - செப்டம்பர் 1, 2022

சுவாதி - செப்டம்பர் 1, 2022

இந்த நாளில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குகிறார்கள். பெண்கள் கசாவி புடவை, ஆண்கள் முண்டு அணிகிறார்கள். அதே நேரத்தில் சிறுமிகள் பட்டு பாவாடை அணிகின்றனர். ஓணக்கொடி என்று அழைக்கப்படும் விழாவைக் குறிக்கும் வகையில் பூக்களத்தில் மேலும் ஒரு அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

விசாகம் - செப்டம்பர் 2, 2022

விசாகம் - செப்டம்பர் 2, 2022

மலையாளிகள் தங்கள் வீடுகளில் பருவத்தின் புதிய அறுவடை சிறப்பு தினத்தைக் குறிக்க குடும்பங்கள் பலவகையான உணவுகளை சமைத்து உண்கின்றனர்.ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இந்த உணவினை ஓண சாத்யா என அழைப்பர். பின் புலிகளி நடனங்கள் அரங்கேறும்.

அனுஷம் - செப்டம்பர் 3, 2022

அனுஷம் - செப்டம்பர் 3, 2022

ஐந்தாம் நாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பா ஆற்றில் வல்லம்களி என்ற புகழ்பெற்ற படகுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

கேட்டை - செப்டம்பர் 4, 2022

கேட்டை - செப்டம்பர் 4, 2022

திரிக்கேட்டா என்பது கேட்டை நட்சத்திரமாகும். குடும்பங்கள் தங்கள் மூதாதையரின் வீடுகள் மற்றும் கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறும் சிறப்பு சந்தர்ப்பமாகும். இதற்கிடையில், பூக்களத்தில் புதிய மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

மூலம் - செப்டம்பர் 5, 2022

மூலம் - செப்டம்பர் 5, 2022

கொச்சி முழுவதும் உள்ள கோயில்களில் இந்த தினம் முதல் ஓணசத்யா வழங்கத் தொடங்குகிறது. கேரளாவின் பல்வேறு இடங்களில் புலிகளி, கைகொட்டுக்களி உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன.

 பூராடம் - செப்டம்பர் 6, 2022

பூராடம் - செப்டம்பர் 6, 2022

எட்டாவது நாளில், ஒவ்வொரு நாளும் பூக்கள் சேர்ப்பதன் மூலம் பூக்களம் பெரிதாகிறது. பூராடம் பூக்களத்தின் நடுவில் மகாபலி மற்றும் வாமனரின் களிமண் சிலைகளை வைத்து பூராடம் தொடங்குகிறது. புராணத்தின் படி, அந்த செயல் மகாபலிக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதற்கான அழைப்பைக் குறிக்கிறது.

உத்திராடம் - செப்டம்பர் 7, 2022

உத்திராடம் - செப்டம்பர் 7, 2022


மேலும், முதல் ஓணம் என்று அழைக்கப்படும். கேரளாவில் உள்ள அனைத்து பக்தர்களும் மகாபலியின் வருகையைக் குறிக்க சிறப்பு தயாரிப்புகளை செய்கிறார்கள். புதிய அறுவடையின் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

திருவோணம்- செப்டம்பர் 8, 2022

திருவோணம்- செப்டம்பர் 8, 2022

திருவிழாவின் கடைசி நாளான திருவோணம் என்பது மன்னன் மகாபலியை வரவேற்கும் அடையாளமாக மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு கொழப்பமிடுகின்றனர்.. ஓணசத்யா எனப்படும் ஓணம் விருந்து தயாரிக்கப்பட்டு உறவினர்கள் இணைந்து ஒன்றாக சாப்பிடுவார்கள்.

ஓண சத்யா

ஓண சத்யா

ஓண சத்யா என அழைக்கப்படும் இந்த விருந்தில் அறுசுவைகளில் 64 வகைகளுடன் ஓண விருந்து தயாரிக்கப்படுகிறது. புத்தரிசி மாவில் அடை, அவியல், அடை பிரதமன், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி அல்லது இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய்கள், பால் பாயாசம், அடை பாயாசம், சிறுபருப்பு பாயாசம் என பல்வேறு வகையான உணவுகள் தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். பின்னர் நண்பர்கள், விருந்தினர்களுடன் குடும்பமாக அமர்ந்து ஓணம் விருந்தை வாழை இலையில் பரிமாறி மக்கள் ரசித்து, ருசிப்பார்கள்.

மகிழ்வடையும் மகாபலி சக்கரவர்த்தி

மகிழ்வடையும் மகாபலி சக்கரவர்த்தி

ஓணம் பண்டிகையின்போது பெண்கள் மகிழ்வோடு கைகொட்டுக்களி நடனம் ஆடுவர். கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி நடனம் ஆடுவர். பெரும்பாலும் கை கொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும், அவரை வரவேற்கும் விதமாகவும் அமைந்திருக்கும். இந்த காட்சிகளை எல்லாம் பார்த்தபின் மகாபலி சக்கரவர்த்தி மகிழ்ச்சியுடன் மீண்டும் பாதாள உலகுக்கு செல்வதாக ஐதீகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+