கதிகலங்கிய கரூர்.. அஜயை சந்திக்கும் விஜய்! அதிரடிக்கு தயாரான தவெக! இனிமே தான் ட்விஸ்டே காத்திருக்கு!
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு விரைவில் கரூர் வர இருக்கும் நிலையில் அவர்களை சந்தித்து ஆவணங்களை வழங்க தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது, செருப்பு வீசியது, போலீசார் நடத்திய தடியடி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அந்த ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என நம்புகிறது தமிழக வெற்றிக் கழகம்.
கரூரில் நடந்த நெரிசல் மரண விவகாரம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் 27ஆம் தேதி நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து, வழக்கு தற்போது சி.பி.ஐ. விசாரணையின் கீழ் கொண்டுக் வரப்பட்டுள்ளது. அதுமட்டு இல்லாமல், உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது.

கரூர் நெரிசல்
இந்நிலையில், த.வெ.க. தரப்பினர் தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் அஜய் ரஸ்தோகியை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்துள்ளனர். கரூரில் நிகழ்ந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடக்கம் முதல் இன்று வரை நடந்த அனைத்து விவரங்களையும் கட்சி வட்டாரங்கள் தொகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் போலீசாருடன் நடந்த உரையாடல்கள், அதிகாரிகள் அளித்த நிபந்தனைகள், கூட்டத்தின் போது நடந்த சிக்கல்கள் போன்ற விவரங்கள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ விசாரணை
மேலும், சிலர் கூட்ட நெரிசலின் போது முகம் தெரியாத நபர்களால் தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டது, சிலர் செருப்பு வீசியது, மற்றொருபுறம் போலீசார் தடியடி நடத்தியது போன்ற பல சந்தேகத்துக்கிடமான நிகழ்வுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான சாட்சியங்கள், வீடியோ காட்சிகள், சி.சி.டி.வி. பதிவுகள் போன்ற முக்கியமான ஆதாரங்களையும் த.வெ.க. தரப்பினர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் கரூர் விஜயம்
நடிகர் விஜய் இதுவரை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவில்லை என்றாலும், வீடியோ அழைப்பின் மூலம் சிலருடன் பேசியுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார். எனினும், கரூருக்குச் சென்று நேரில் ஆறுதல் கூற விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், பாதுகாப்பு காரணங்களால் இதற்கான போலீஸ் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் விஜயின் பயணம் தாமதமாகி வருகிறது.
சிபிஐ விசாரணை
இதற்கிடையில், சி.பி.ஐ. தற்போது விசாரணையை முழு வேகத்தில் தொடங்கியுள்ளது. கரூரில் முகாமிட்டுள்ள அதிகாரிகள், முதற்கட்டமாக தமிழக போலீசாரிடமிருந்து ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பெற்றுள்ளனர். அடுத்த வாரம் நீதிபதி அஜய் ரஸ்தோகி கரூருக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும்போது த.வெ.க. தரப்பினர் அவரை நேரில் சந்தித்து, தங்களிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வழங்கி, சம்பவத்தின் உண்மையை வெளிக்கொணர விரும்புகிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் கரூர் நெரிசல் மரண விவகாரம் குறித்து பல முக்கியமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications