பங்குனி பிரம்மோற்சவம் 2020: கருடவாகனத்தில் வலம் வந்த பெருமாளை தரிசித்த பக்தர்கள்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி: கருடசேவையில் பெருமாள் எழுந்தருளுவதை காண கண் கோடி வேண்டும். திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது. மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுத்தனர். ஏராளமான பக்தர்கள் இதனை தரிசனம் செய்தனர். இதேபோல திருநின்றவூர் ஸ்ரீ என்னைப்பெற்ற தாயார் சமேத ஸ்ரீபக்தவச்சல பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருடசேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79வது ஸ்தலமாகும். வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருக்குறுங்குடி நம்பியை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கு நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார்.

இறைவனின் சிறப்பு
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீராமானுஜர் இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டுஉபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும். ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரி களிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..

திருக்கல்யாண பிரமோற்சவம்
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10ஆம் தேதி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருத்தேர் முன்பு கால் நாட்டப்பட்டது.

கருடசேவை தரிசனம்
இதையடுத்து 5 நம்பி சுவாமிகள் கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு மேலரதவீதியில் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரியும் இரவில் வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் நடைபெறுகிறது.

பெருமாள் கருடசேவை
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் ஸ்ரீ என்னைப்பெற்ற தாயார் சமேத ஸ்ரீபக்தவச்சல பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக மூன்றாம் நாள் நடைபெற்ற கருடசேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். மன்னார்குடி ராஜகோபால சுவாமி,
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications