பங்குனி உத்திரம்.. முருகன் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்..பழனியில் திருத்தேரோட்டம் கோலாகலம்
சென்னை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. மயிலம் முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பழனியில் நேற்றைய தினம் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரத்திருவிழா உலகமெங்கும் வாழும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காவடி சுமந்து கொண்டு பாதையாத்திரையாக வந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.

உத்திர நட்சத்திரம் இன்று காலை 10.17க்குத் தொடங்கி நாளை பகல் 11.58 வரை நீடிக்கிறது. இன்றைய தினம் முருகன் ஆலயங்களிலும் நாளைய தினம் சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.
பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள் தான். பங்குனி உத்திர நன்னாளில் தான், அகத்தியர் லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவர்களின் தலைவனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமையும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்த பங்குனி உத்திர நாளில் தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மயிலம் முருகன் கோவில் தேரோட்டம்
முருகன் கோயில்களிலும் சிவ ஆலயங்களிலும் பங்குனி பிரம்மோற்சவம், உத்திரத் திருவிழா, தேரோட்டம் என்று தமிழ் நாடெங்கும் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருக பெருமான் வீதியுலா வந்தார்.
பழனியில் பங்குனி உத்திரம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருஆவினன் குடி முருகன் ஆலயங்களிலும் தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தலையில் தீர்த்தகாவடிகளுடன் பாதையாத்திரையாக பழனிக்கு வந்துள்ளனர்.
நேற்றைய தினம் பழனியில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் உலாவந்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்றைய தினம் மாலையில் மலை அடிவாரத்தில் தேரோட்டம் நடைபெறுவதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற முழக்கம் எங்கும் எதிரொலிக்கிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications