மோடிக்கு மஹாதசை நடக்குதாம்.. அடுத்த வருடம் மேஜர் ஆக்ஷன் எடுக்க போறாராம்.. அடித்து சொல்லும் ஜோதிடர்
டெல்லி: பிரதமர் மோடிக்கு மஹாதசை நடக்கிறது என்றும், இதனால் அடுத்து ஆண்டு மேஜர் நடவடிக்கையாக, பாகிஸ்தாஸ் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதிதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. 1947 முதல் இந்த பகுதியை பாகிஸ்தான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என உண்மைக்கு மாறாக உரிமை கொண்டாடி வருகிறது. எனினும், இந்திய அரசு இதனை நிராகரித்து, இந்தியாவின் ஒரு பகுதிதான் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் நிலம் முழுவதும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என வெளிப்படையாக பிரகடனம் செய்தது. வரைபடமும் வெளியிட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஏதேனும் ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என கூறப்பட்டு வந்தது.
ருத்ரா கரன் பர்தாப் கணிப்பு: இந்த நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான் ஜோதிடராக விளங்கும் ருத்ர கரன் பர்தாப்பை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள்.
இவர் அவ்வப்போது, தனது எக்ஸ் பக்கத்தில் தனது கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது, ருத்ரா கரன் பர்தாப் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமகாக பரவி வருகிறது. இது தொடர்பாக ருத்ரா கரன் பர்தாப் கூறியிருப்பதாவது:- ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதசையை கடந்து வருகிறார்.
இந்தியாவுடன் இணைக்கப்படும்: இந்த கால கட்டத்தில் நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது. எனவே, ஏப்ரல் 2025 - செப்டம்பர் 2025 கால கட்டத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுபோக பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார்.
இது பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். எனவே, இதற்கான கிரெடிட் அல்லது அக்னாலேஜ்மேண்ட் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். ஜோதிடர் ருத்ராவின் பல கணிப்புகள் இதற்கு முன்பாக அப்படியே நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார்: அதில், வரும் 2024 மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் ரீதியாக கடுமையான பின்னடைவை சந்திப்பார் என்று கூறியிருந்தார். ருத்ராவின் இந்தகணிப்பு அப்படியே பலித்தது போல உள்ளது. அதாவது தற்போது கெஜ்ரிவால் கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்: ருத்ரா கரன் பர்தாப்பின் கணிப்புகள் பலவும் அப்படியே நடந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் என்று அவர் கணித்து இருந்தாராம். அதேபோல, 2022 உத்தர பிரதேச தேர்தல் முடிவுக்ள், 2022 பஞ்சாப் தேர்தல் முடிவுகள், 2022 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்புகள், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி என பல கணிப்புகளை வெளியிட்டு இருந்தாராம். இவை அப்படியே நடந்ததாக அவரை பின்பற்றும் நெட்டிசன்கள் சிலாகிக்கிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications