Purattasi matha palan: அதிர்ஷ்டத்தை அள்ளும் ரிஷப ராசி.. பிரச்சனைக்கு எல்லாம் தீர்வு.. ஒரே குஷிதான்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம், படிப்பு, வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம், முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் காணப்படும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
பாதிப்புகள் நீங்கும்
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கும், உங்களுக்குமான சிறிய வாக்குவாதங்கள் கூட பெரிய மனக்கசப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பண வரவு நன்றாக இருக்கும்.
நல்ல செய்திகள் வரும்
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும் யோகம் உண்டும். பெற்றோர், பெரியவர்களுடன் இருந்த கஷ்டங்கள், மனத்தாங்கல்கள் எல்லாம் நீங்கும். இதுவரை தடையை ஏற்படுத்திக் கொண்டிருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாமே மாறும்.
தானம் அளிப்பது நல்லது
தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையும். சுபகாரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அபிராமி அந்தாதியில் இருந்து 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது, கேட்பது மேன்மையைத் தரும். விரையங்கள் அதிகமாக இருக்கும் காலகட்டம் என்பதால் செவ்வாய்க்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு உணவு தானம், எலுமிச்சை ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஜூஸ் தானமாக கொடுப்பது அற்புதமான நன்மைகளை ஏற்படுத்தும்.
வாக்குவாதம் வேண்டாம்
குடும்பத்தில் நேரத்தை செலவிட்டு மனம் விட்டுப் பேசுவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துணையுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பெரிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பெருமாள் வழிபாடு அனுகூலத்தை தரும். சனிக்கிழமை தோறும் தவறாமல் பெருமாள் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications