Puthandu Palan: கடக ராசிக்கு காதலில் வெற்றி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. குட்நியூஸ் காத்திருக்கு
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கடகம் புத்தாண்டு பலன்
கடக ராசிக்காரர்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மார்பகம், நெஞ்சம், அடிவயிறு கீழ், இதயம் தொடர்பான பாதிப்பு வரும் என்பதால் கவனம் தேவை. சுபகாரியங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும். திரிகோணத்தில் சனி குரு வந்தாலே உங்களுக்கு நல்லவை நடக்கம் யோகம் உண்டு. திருமணம் நடக்கும் யோகம் உண்டு. காதல் கைகூடும் வாய்ப்புள்ளது.
ஆட்சி, அதிகாரம்
கடக ராசி அரசியல்வாதிகளுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கை மாறுவது கண்கூடாகத் தெரியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கிடைக்கும். பதவி உயர்வுகள் வரும். அருமையான வீடு வாங்கும் யோகம் உண்டாகும். போலீஸ் குவாட்டர்ஸ், போலீஸ் ஸ்டேசன், மிலிட்டரி குவாட்டர்ஸ் இருக்கும் பகுதிகளில் வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
திருமண யோகம்
வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிவர்த்தியாகும். திருமணம் நடக்கும் பாக்கியம் உண்டாகும். பதவி உயர்வு, பணவரவு உண்டாகும் வாய்ப்புள்ளது. வாழ்க்கை மாறுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். வேலை, தொழில், அந்தஸ்து உத்தியோகம் நன்றாக சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளுக்கு ஆலோசனை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையே மாறும் யோகம் உள்ளது.
புரட்சி ஏற்படும்
பெண்களாகட்டும், ஆண்களாகட்டும், விவாசியிகளுக்கும் நன்றாக இருக்கும். விவசாயப் புரட்சி ஏற்படும், பால் புரட்சி, காய்கறி புரட்சி, தண்ணீர் வசதியில் புரட்சி என அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடல், நீர்வளம் சம்பந்தப்பட்ட விவசாயங்களில் புரட்சி ஏற்படும். வங்கித் துறை டெக்னாலஜி மாறும். அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் வரும். பணம், பொருளாதாரம், சந்தோஷம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கும். கெளரவம் அதிகரிக்கும்.
மதிப்பெண்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல விஷயங்கள், செயல்கள் அனைத்தும் நடக்கும். சந்தோஷம், பொருளாதார ஏற்றம் 85 சதவீதம் நன்றாக இருக்கும். நிறைய சுபச் செலவுகளைச் செய்வீர்கள். மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாண மகோத்சவத்தை செய்வதாக வேண்டிக் கொள்வது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications