மகர ராசிக்கு எல்லாம் சூப்பர்.. ஆனா வாயில தான் கண்டமே.. கவனம் கவனம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் ராகு கேது பெயர்ச்சியும் ஒன்று. ராகு கேது பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ராகு - கேது என்பது சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி 18.5.2025 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்படி, ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளனர்.

ராகு கேதுவின் இந்த பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது பெயர்ச்சி மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்கள் ராகு பவான் 3 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். ஏழரை சனி முற்றிலுமாக விலகியுள்ளது. 2 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவுக்கு குருவின் பார்வை உள்ளது. 2 ஆம் இடம் என்பது தனம், குடும்பம் வாக்கு ஸ்தானத்தை குறிப்பதாகும். இந்த இடத்தில் ராகு வந்துள்ளது என்பது ஓரளவுக்கு சுமாரான அமைப்பாகும். ஆனால், குரு பார்வை இருப்பதால் ராகுவால் ஏற்படும் கெடுபலன்கள் பெரிய அளவில் குறையும்.
கேது பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். 8 என்பது ஆயுள் ஸ்தானம். மறைமுக ஸ்தானம் ஆகும். அங்கு கேது இருப்பது ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். மகர ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் 65 சதவீத நன்மைகள் உண்டாகும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயம்
2 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பரபரப்பாக பேசும் சூழ்நிலையை உருவாக்கும். கோபப்படுவது, கடும் சொல்லை பேசுவதை தவிர்ப்பது நல்லது. பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 8 இல் இருக்கக்கூடிய கேது சுக்கிரனின் ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகள் விஷயத்தில் சிறு சிறு பாதிப்பைக் கொடுக்கும். குழந்தைகளால் மன சங்கடம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனை நிதானமாக ஹேண்டில் செய்வது நல்லது.
தொழில்
தன ஸ்தானத்தில் ராகு இருந்தாலும் குருவின் பார்வை உள்ளது. குருவின் 3 ஆம் பார்வை இருப்பதால் வெற்றி, தைரியத்தைக் கொடுக்கும். தொழிலில் புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். சிறு முயற்சி கூட பெரிய அளவில் லாபத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். எதிர்பாராத வெற்றிகள் உண்டாகும். அதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
எச்சரிக்கை
அரசு சார்ந்த விஷயங்கள், ஆவணங்கள், அரசு சார்ந்த அப்ரூவல்கள் போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கேது 8 இல் இருந்து சூரியனின் சாரத்தில் சஞ்சரிப்பதால் அரசு தொடர்பான பிரச்சனைகள், தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வேலை
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் பண வரவு உண்டாகும். அதே குரு 12 ஆம் இடத்திலும் இருப்பதால் விரையமும் ஏற்படும். கையில் பணத்தை சேமித்து வைப்பது எப்படி என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். பதவி உயர்வு, சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கக்கூடிய யோகம் உண்டாகும். ராசிநாதனாகவும் இருப்பதால் உங்களுக்கு வருமானத்தைக் கொடுக்கும். மீண்டும் கடன்களில் இறங்காமல் எதிர்காலத்தை கட்டமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
வேலையில் இருப்பவர்கள் உங்களை நம்பிக் கொடுக்கும் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. மற்றவர்களிடம் கொடுத்து வேலை வாங்கினால் கட்டாயமாக பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும். நீங்களே செய்தால் அதன் மூலம் அனுகூலம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
திருமணம்
சிறு சிறு பாதிப்புகள் திருமணத்தில் வந்து சேரும். சிறிய சச்சரவுகள் வந்து போகக்கூடிய அமைப்புகள் உண்டாகும். திருமணத்தை தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து கொள்வது நல்லது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்ப விருக்தி உண்டாகும். சனியின் பார்வை 5 ஆம் இடத்தில் படுவதால் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். இயற்கையாகவே குழந்தைப் பேறு உண்டாகும் வாய்ப்புள்ளது.
முதலீடு
மகர ராசியினர் கோல்டு இடிஎஃப்களில் முதலீடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய அமைப்பாகவும் இருக்கும்.
வழிபாடு
கேது 8 இல் இருப்பதால் ஆரோக்கிய குறைபாடு, கணவன் மனைவிக்குள் பிரச்சனை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. திருமுருகன்பூண்டியில் உள்ள மங்களாம்பிகை கோயிலில் வழிபடுவது அற்புதமான நல்ல பலன்களை அள்ளித் தரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications