Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கான பலன்கள்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெற்றுள்ளது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-2025-what-kind-of-benefits-will-get-mesham-to-meenam-rasi-people-during-rahu-ket

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி. 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, குரு பார்வை கொடுப்பதால் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். தொழில் அமைக்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். புதிய கார் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, உத்தியோக வளர்ச்சி, பதவி உயர்வு உண்டாகும்.

லாப ஸ்தானத்தில் ராகு உட்கார்ந்து குரு பார்வை கிடைப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளையார்பட்டி பரிகாரம் செய்வது உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். ராகு உங்களுக்கு வெளிநாடு, வெளியூர் சென்று வேலை பார்க்கும் யோகத்தைக் கொடுக்கப் போகிறார். பெரிய பதவிகளில் நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல காலகட்டமாக இருக்கும். 10 ஆம் ஸ்தானம் என்பது தொழில் ஸ்தானம். தொழில் ஸ்தானத்தில் ராகு அமருவதால் தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.

தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். 10 ஆம் இடம் ஜாதகருக்கு சரியாக இருந்தால் அதிகபட்ச புகழ், பணம், கெளரவம் உண்டாகும். நிறைய ரிஷப ராசிக்காரர்கள் தொழில் முனைவோராகும் வாய்ப்புண்டு. கலையில் நல்ல காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சொந்த வீட்டில் சில பேருக்கு பிரச்சனை ஏற்படும்.

மிதுனம்

9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் ராகு வந்து குரு பார்வை கிடைக்கும் போது கும்பாபிஷேகம் செய்யும் யோகம் கிடைக்கும். குழந்தைகளுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். நல்ல படிப்பு, அருமையான வாழ்வு, குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். அரபு நாடு, இத்தாலி நாடுகளில் வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மகான்கள் வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். பெரிய அங்கீகாரம், ராஜமரியாதை கிடைக்கும். அனைவராலும் புகழ்ந்து பாராட்டப்படுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். யோகா, தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும். இளைய சகோதரன், சகோதரி வழியாக சிறிய சிறிய பாதிப்புகள் ஏற்படும். ராகு கேது பெயர்ச்சி மிதுனத்துக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். புண்ணியத்தை கொடுக்கும் காலகட்டம்.

கடகம்

அஷ்டம சனியில் இருக்கக்கூடிய நிலைமைகளில் 9 ஆம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்துக்கு சனி போவது விமோசர்னமான காலகட்டமாக இருக்கும். அஷ்டமத்துக்கு ராகு வந்தாலும் குரு பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. 20 சதவீதம் மட்டுமே ராகுவால் பாதிப்பு ஏற்படும். மற்றபடி 80 சதவீதம் நற்பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையை புரிந்து கொள்ளும் காலகட்டமாக இருக்கும்.

எதிர்பார்க்காத திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நண்பரால் அதிர்ஷ்டம் உண்டாகும். காப்பீடு, உயில், லாட்டரி போன்றவற்றில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் பார்ட்னராகும் யோகம் உண்டு. எதிர்பார்க்காத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடந்து உயரிய பதவிக்குச் செல்வீர்கள். தந்தையின் பதவி கிடைக்கும். ரயில்வேயில், அரசு துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். பேசும் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரிவுகள் அதிகம் வந்திருக்கும். தொழில், பணி நிமித்தமாகவோ குடும்பத்துக்குள் பிரிவுகள் ஏற்பட்டிருக்கும். ராகு ஏழாம் இடத்தில் அமர்ந்து குரு பார்வை இருப்பதால் அது குடும்ப அந்நியோன்யத்தை பெரிதாக பாதிக்காது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரிய பெரிய சங்கங்கள், அமைப்புகளில் அதாவது சமூகத்தில் புதிய பெழறுப்புகள் வரும்.

ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ராசி மற்றும் லக்னத்தில் கேது வருவதால் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் புதிய உச்சம் தொடுவீர்கள். உத்யோகத்தில் நல்ல மாற்றம் இருக்கும். வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் உண்டு. மூத்தவர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கேதுவால் அடிக்கடி மனக்குழப்பங்கள் வந்து செல்லும். கொடுமுடியில் உள்ள பிரம்மா, சிவன், விஷ்ணு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வரலாம்.

கன்னி

கன்னி ராசிக்கு கடந்த கால மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. பணியிட மாற்றம் இருக்கும். ராகு ஆறாம் இடத்துக்கு வருவதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளில் முதன்மையான ரேங்கில் வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். கடன் சுமை முழுமையாக விலகும்.

புதிய வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை புனரமைப்பது போன்ற சுப செலவுகள் இருக்கும். பெரிதாக திட்டமிட்டு அதில் பிரம்மாண்ட வெற்றி பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் நிகழும். அனைத்து காரியத்திலும் வெற்றிகள் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வது அவசியம். மீனாட்சி சுந்தரேஷ்வரரின் திருக்கல்யாணத்தை பார்ப்பது நல்லது. ஶ்ரீராம ஜெயம் எழுதுவது கேட்பதால் மனதில் அமைதி வந்து பிரச்னைகள் நீங்கும்.

துலாம்

பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து குரு பார்வையும் இருப்பதால் ராஜ யோகம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு.

லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் நீங்கும். உடலில் சுண்ணாம்பு சத்து குறைய வாய்ப்புள்ளது. கால் முட்டி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேற்று மொழி நண்பர்களிடம் அகவனமாக இருக்க வேண்டும். கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ள குகே சுப்ரமணியா முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

ராகு 4 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிரம்மாண்டமான வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தேவைக்கு அதிகமான பண வரவு உண்டாகும். சுக ஸ்தானம் என்பது வீடு மட்டுமல்ல காளை மாடு, பசு மாடு வாங்குவது, சோப செட், நல்ல மெத்தைகள் வாங்கும் யோகம் உண்டாகும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.

வங்கிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சட்ட சவால்களை சந்திக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். கேந்திரத்தில் ராகு உட்கார்ந்து குரு பார்ப்பதால் நிறைய பணம் காசுகள் வந்து சேரும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். முட்டி, கால் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்று விதமான அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது. குரு பார்வை, சனி பார்வை, ராகு குரு பார்வையுடன் 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். சிஸ்டம், ஐடி, சாஃப்ட்வேர், கம்யூனிகேஷன், ஆராய்ச்சி, அயல்நாடு, விமானம், டிராவல் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.

அனைத்து விஷயங்களும் உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. 3 ஆம் இடத்துக்கு ராகு வருவதால் வேறு ஊருக்கு இடமாற்றம் யோகம் உண்டாகும். இருக்கும் துறையில் இருந்து வேறு துறைக்கு மாறும் யோகம் உண்டாகும். பூர்வீகத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற வேண்டிய சூழல் ஏற்படும். வருமானங்கள் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஏகாதசியன்று சென்று ராகவேந்திரரை வழிபடுவது நல்ல மாற்றத்தை தரும்.

மகரம்

2 ஆம் இடத்தில் ராகு அமர்ந்துள்ளதால் பணம் கொட்டும். குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிறைய பேர் புது கண்ணாடி போடும் யோகம் உண்டாகும். இதனால் நல்ல மாற்றம் உண்டாகும். சிலர் பற்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். லென்ஸ் கரெக்ஷன், விட்டமின் குறைபாடுகள் நீங்கும். இரவு நேரத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

தினந்தோறும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. 2 ஆம் இடத்தில் ராகு அமருவதால் கணவன் மனைவி இருவரும் சொல் பேச்சைக் கேட்பது நல்லது. இதனால் பணம் கையிருப்பு உண்டாகும். தொழில்கள் தொடங்க அருமையான காலகட்டமாக இருக்கும். முன்னேற்றத்தைக் கொடுக்கும். 3 ஆம் இடத்தில் சனி உட்காருவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனியின் அருளால் மன வலிமை உண்டாகும். உச்சிஷ்ட மகா கணபதியை வழிபாடு செய்தால் கேதுவால் வரும் பாதிப்புகள் எல்லாம் தீரும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் ஜென்மசனியில் இருந்து விடுதலை அடைகின்றனர். குரு பார்வை ராகு மீது உள்ளதால் குரு சண்டாள யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு உண்டாகப் போகிறது. உங்களுடைய சிந்தனைகள் பெரிதாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் பெரிதாக செய்வீர்கள். புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

மறுமணம் நடக்கும் யோகம் உண்டு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான காலகட்டம். வில்லங்கமான சொத்துகளை நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்றும் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பார்ட்னர்களுடன் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ராகுவின் அருளால் பண வரவு அதிகமாகும். நாகராஜரை வழிபாடு செய்வது பெரிய மாற்றத்தை தரும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கும் ராகு உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கப் போகிறார். யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். விரையத்தில் இருக்கும் ராகு குரு பார்வையில் அமருவதால் இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.

ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். பஞ்சம ஸ்தானத்தில் குரு சென்று ராசி, லக்னத்தைப் பார்ப்பது பெரிய வெற்றியைத் தரும். யாரோ ஒருவர் செய்த செயலுக்கு உங்களுக்கு பலன் கிடைக்கும். நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். மாசாணியம்மன் வழிபாடு, மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு அருமையான பலன்களைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+