பதறவைக்கும் ராகு கேது பெயர்ச்சி.. எச்சரிக்கையாக இருந்தே ஆக வேண்டிய 4 ராசியினர் யார் தெரியுமா?
ராகு கேது பெயர்ச்சி 2025: நடப்பு ஆண்டில் ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த ராசி மாற்றம் மற்றும் கிரக இயக்கங்களின் மாறுபாடு 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்களையும், சில ராசியினருக்கு கெடு பலன்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ராகு பகவான் மீனத்தில் இருந்து கும்பத்துக்கும், கன்னி ராசியில் இருக்கும் கேது பகவான் சிம்ம ராசியை நோக்கியும் பயணம் செய்யவுள்ளனர். கும்பம், சிம்மத்தில் அமரக்கூடிய ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சியானது அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடித்து இருக்கும். வருட கிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்தபடியாக பலம் பொருந்திய, நீண்டநாள் ஒரு ராசியில் பயணிக்க கூடியது ராகு கேது கிரகங்கள் தான்.
ராகு கேது பகவானை ஜோடி கிரகம், சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒன்றாகத்தான் இந்த இரு கிரகங்களும் பெயர்ச்சியாவார்கள். நேரெதிர் வீடுகளில் இருப்பார்கள். ராகு கேதுக்கள் பெயர்ச்சியாகி அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு நிறைய ராசியினருக்கு நன்மையை தருவார்கள். ஒரு ராசிக்காரர்களுக்கு நல்ல சிறப்பான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு கெடு பலன்களையும் தரும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியில் தொழில், குடும்பம், பொருளாதாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் யார். எந்தவிதமான பாதிப்புகளையும் கஷ்டங்களையும் சந்திக்கப் போகிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
கும்பம் - ஜென்ம ராசியில் ராகுவும், 7 ஆம் இடத்தில் கேது வருகிறார். காலகஸ்தியில் ராகு கேது பகவானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நெய் பரிகாரமாக அளிப்பது நல்லது. மன அழுத்தம் உண்டாகும். வயிறு தொடர்பான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். ஜீரண உறுப்புகளை சரிசெய்வது நல்லது. உடற்பயிற்சி செய்வது நல்லது. குரு 5 இல் வந்து ராசியைப் பார்ப்பதால் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ஏற்றம், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். சுப காரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம் - சிம்ம ராசிக்கு 7 இல் ராகு, ஜென்ம ராசியில் கேது வருகிறார். கோளர் பதிகம் கேட்பது நல்லது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். திருப்பாம்பரத்தில் உள்ள ராகு கேது ஸ்தலத்தில் வழிபடுவது, அருகில் உள்ள நவக்கிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கு விளக்கேற்றுவது நல்லது. அஷ்டமசனி என்றாலும் குரு 11 இல் இருந்து ராகுவை பார்ப்பதால் திருமண யோகம் உண்டாகும்.
மகரம் - 2 இல் ராகு வந்தால் அஷ்டமத்தில் கேது என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. முதுகு தண்டுவட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. குருவாயூரில் வெள்ளை பொருள்களை தானமாக வழங்குவது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கழுத்து, முதுகு தண்டுவடம், நரம்பு பிரச்சனை, கால் கைகளில் பிரச்சனை உண்டாகும். ராசிநாதன் சனி என்பதால் வேர்வை வரும்படியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். துலாமில் சனி உச்சம் பெறுவதால் எதிர்பாராத பலன்களைத் தரும்.
கடகம் - ராகு 8 இல், கேது 2 இல் வருகின்றனர். வயிறு பிரச்சனைகள் ஏற்படும். தஞ்சாவூரில் உள்ள பட்டீஸ்வரன், துர்கையை வழிபடுவது நல்லது. 38 எலுமிச்சை பழங்களை பரிகாரமாக கொடுப்பது நல்லது. 5 எலுமிச்சைகளை திரும்ப வாங்கி சாப்பிடுவது நல்லது. கடக ராசி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தால் பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். யோகமும், அனுகூலமும் உண்டாகும். சர்ப்ப கிரகம் 8 இல் வருவது நல்லது. தியானம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications