ராகு கேது பெயர்ச்சி: கடக ராசிக்கு விபரீத ராஜ யோகத்தால் செம அதிர்ஷ்டம்.. உங்க காட்டுல பண மழைதான்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது கடகம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் எட்டாம் இடத்துக்கும், கேது பகவான் இரண்டாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். அஷ்ட சனியால் ஏராளமான பாதிப்புகளை சந்தித்திருப்பீர்கள். அஷ்டம சனி விலகியிருப்பது நல்லதுதான். தற்போது ராகுவை, 12 ஆம் இடத்தில் உள்ள குரு பார்ப்பதால் விபரீத ராஜ யோகம் உருவாகும்.
சொத்து
பூர்வ ஜென்ம சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஷேர் மார்க்கெட், குவாரி, பெட்ரோல் பங்க், கூரியர், ஜோதிடம் ஆகிய துறைகளில் இருப்போருக்கு நல்லது நடக்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம், ஆபரணங்கள் போன்ற அசையா சொத்துகள் சேரும். எதிர்பாராத பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் உள்ளது. வீடு, உத்யோகம், தொழில் எதிர்பார்த்த இட மாற்றம் நடைபெறும்.
குடும்பம்
சர்ப்ப கிரகம் எட்டாம் இடத்துக்கு வருவது நல்ல அமைப்பு. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி, குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். மனதை ஒரு நிலைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் தேடி வரும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு ஏற்றம் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்றாக இருக்கும்.
கவனம்
உங்கள் சக்திக்கு மீறி ஏதாவது விஷயத்தில் இறங்கினால் சிக்கல் ஏற்படும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். தலை சார்ந்த பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. வண்டி, வாகனம் இயக்கும்போது எச்சரிக்கை அவசியம். தந்தை ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. அவமானங்கள் ஏற்படும். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் பொறுமையுடன் திட்டமிட்டு முடிவு எடுக்க வேண்டும். சனி விலகினாலும் அந்த இடத்தில் ராகு இருப்பதால் குடும்பம், உத்யோகம் எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை.
பரிகாரம்
மாணவர்களுக்கு கல்வியில் மந்தத்தன்மை இருக்கும். மனதில் குழப்பம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் வேண்டும். கால பைரவர் வழிபாடு அவசியம். பிள்ளையார்பட்டி மற்றும் அதன் அருகே உள்ள வைரவர்பட்டி பைரவர் கோயில் சென்று அபிஷேகம் நடத்தி வழிபடுவதால் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைத்து வளர்ச்சி ஏற்படும்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications