ராகு கேது பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. பிரகாசமாக மாறும் வாழ்க்கை.. பண மழை கொட்டும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களைப் பொருத்தவரைக்கும் சனி பகவான் 10 ஆம் பாவத்தில், 11 ஆம் பாவத்தில் என அனுகூலமாக இருக்கிறார். ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாகவே சொகுசாகவும், உல்லாசமாகவும், உணர்வுப்பூர்வமாக இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதியாக வரக்கூடிய குரு பகவான் கோச்சாரத்தில் ஜென்ம ராசியில் வந்து அமர்ந்திருக்கிறார். கடந்த 10 மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள்.
குரு பகவான் தனக்காரகன். பொருளாதார ரீதியாக நிறைய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். நிறைய பணத்தை முடக்கி வைத்திருப்பதால் அதில் எந்தவொரு லாபத்தையும் பார்க்காமல் இருந்திருப்பீர்கள். வட்டிக்கு மேல் வட்டி, நிறைய கடன்களால் கணவன், மனைவிக்குள் பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். தலை, உடம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். இனி அந்த நிலைமை மாறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டம்
கோச்சாரத்தில் மூன்று விதத்தில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். ராகு கேது பெயர்ச்சியில் ராகு 10 ஆம் பாவத்துக்கு வருகிறார். பத்தில் பாவம் என்பது அரசானைப் போன்று வாழ்வு உண்டாகும். 9, 10க்கு உரியவர்களான சனி பகவான் லாப ஸ்தானத்துக்கு வருகிறார். குரு பகவான் 2 ஆம் பாவத்தில் வந்து அமர்ந்து பல்வேறு நன்மைகளை வழங்கப் போகிறார். கேது பகவான் 4 ஆம் பாவத்தில் அனுபவிக்கப் போகிறார்கள்.
லாபம் அதிகரிக்கும்
அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு குழந்தைகள், பூர்வீகம் தொடர்பான விஷயங்களில் அனுகூலத்தைப் பெறப் போகின்றனர். இது ஒரு ஜாக்பாட் காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தை முழுவதுமாகப் பயன்படுத்துக் கொள்வது நல்லது. தனம், ஜீவனம், லாபம், ஜென்ம ராசி இந்த 4 நிலைகளிலும் வலுப்பெற போகிறீர்கள். லாபம் பன்மடங்காக உயரும். கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
ராகுவுக்கு குரு பார்வை கிடைப்பதால் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்குச் செல்வீர்கள். தொவில் துறை சார்ந்த விஷயங்களில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது, புதிய ஐடியாக்களை அறிமுகப்படுத்துவதால் பாராட்டைப் பெறுவீர்கள். ராகு செவ்வாயில் சஞ்சரிக்கும்போது வாழ்க்கைத் துணை, வியாபார கூட்டாளி மூலம் ஆதாயம் காண்பீர்கள்.
எச்சரிக்கை
குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத வருத்தம் இருந்திருக்கும். இனி அது நீங்கும். கேது பகவான் 4 ஆம் வீட்டுக்குப் போவதால் வீடு, மனை, தோட்டம், வாகனம், தாய் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேவையான இயற்கை வைத்தியங்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இடம், வாகனங்களை வாங்கும்போது ஒருமுறைக்கு இருமுறை சோதித்துப் பார்த்து வாங்குவது நல்லது.
வீட்டில் வரும் பழுதுகளை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது. நிறைய நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரிஷப ராசியினருக்கு பொற்காலமாக இருக்கும். மீடியா துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். தொழிலில் விரிவாக்கம் செய்வீர்கள்.. புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். கிடைத்த வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்திக் கொடுப்பது நல்லது.
பரிகாரம்
தொடர்ந்து மகாவிஷ்ணு வழிபாடு, ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications