ராகு கேது பெயர்ச்சி பலன் 2022: பங்குனியில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
சென்னை: ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார்.
ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வாக்கியப்பஞ்சாப்படியும், ஏப்ரல் மாதம் திருக்கணிதப்பஞ்சாங்கப்படியும் மாதம் நிகழப்போகிறது. இந்த பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்ம ராசியில் ராகு வந்து அமர்கிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது நல்லது. செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கு போடுவது அவசியம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். உங்க ராசியில் ஜென்ம ராகுவாக அமர்ந்து ஆட்டிப்படைத்த ராகு இனி விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலைஅமையும். போட்டி பொறாமை ஒழியும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும்.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள்.

கடகம்
லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.

சிம்மம்
கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். பாக்ய ஸ்தானத்திற்கு வரும் ராகுவினால் செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தையும் பெருமை புகழையும் தரப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கடன் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications