ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டு.. தொழிலில் ராட்சத வளர்ச்சி.. அசந்துபோகும் அளவுக்கு அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-benefits-of-rahu-ketu-transit-for-rishabam-rasi-peop

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு 10 ஆம் இடத்தில் ராகு, 4 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் உபத்திரவத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், சுவாசக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடு சிறந்த பரிகாரம். தாய் வழி, தந்தை வழி, ரத்த பந்த உறவு, பெற்றோர் தேக ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பதவி, சம்பள உயர்வு

இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். லாபம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்து சேரும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும்.

ஆரோக்கியத்தில் நிம்மதி

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பலவிதமான சிக்கல்கள் தீர்ந்து பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். சமுதாயம் மற்றும் குடும்பத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக ஆரோக்கிய பிரச்சனையின் முக்கிய தாக்கம் தீரும். மரண பயம் நீங்கும்.

தொழிலில் வெற்றி

தொழில் ஸ்தானத்தில் ராகு அமருவதால் தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும். பொக்லைன் போன்ற கன ரக வேலை செய்பவர்கள், டிரான்ஸ்போர்ட், கப்பல் சம்பந்தப்பட்ட வேலை, டிராவல் செய்வது, மெடிக்கல் துறையில் ஆராய்ச்சி செய்வது போன்றவற்றுக்கான காலகட்டமாக இருக்கும். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். 10 ஆம் இடம் ஜாதகருக்கு சரியாக இருந்தால் அதிகபட்ச புகழ், பணம், கெளரவம் உண்டாகும்.

அதிர்ஷ்டம்

எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறும் அமைப்பு உண்டாகும். எல்லா காரியங்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பிறக்கும். லாபம், அனுகூலம், தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். பெரிய முதலாளிகளின் அனுகூலம் கிடைக்கும். பன்மடங்கு லாபம் உண்டாகும். பெரிய அளவில் பணம் சம்பாதிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

வார்த்தைகளில் கவனம்

யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. பதட்டமில்லாமல் இருப்பது நல்லது. வார்த்தைகளை மிக மிக கவனமாக கையாள வேண்டும். தொழிலில் தேவையில்லாத குழப்பம் இல்லாமல் இருப்பது நல்லது. தொழில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. காளஹஸ்தி சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். மாற்றமும், முன்னேற்றமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+