ராகு கேது பெயர்ச்சி: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மகரத்துக்கு பணத்துக்கு நோ பஞ்சம்.. ஒன்லி அதிர்ஷ்டம்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்: மகரம் ராசிக்காரர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களில் இருந்து வந்த பாதிப்பு இப்போது இல்லை. மகரத்தில் இருந்து பாக்கியத்தில் கேது அமரும்போது நிறைய பேருக்கு வயிற்றில் கல் பிரச்சனை இருந்திருக்கும். ஹிரண்யா, சிறுநீரகப் பாதை பிரச்சனை, பெரியவர்களுடன் மன ஸ்தாபம், பூர்வீகத்துக்குச் சென்றாலே தகராறு, உடம்பில் அடித்து போட்டது போல வலி போன்ற பிரச்சனைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் கேது இருந்ததால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள்.
தற்போது அஷ்டம ஸ்தானத்துக்கு கேது போகிறது. இது இன்னும் கொடுமை. உச்சிஷ்ட மகா கணபதியை வழிபாடு செய்தால் கேதுவால் வரும் பாதிப்புகள் எல்லாம் தீரும். உச்சிஷ்ட மகா கணபதியின் படத்தை டவுன்லோடு செய்து மொபைல் வால்பேப்பரில் வைத்து வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். மற்ற எதுவுமே உங்களுக்கு பிரச்சனை இல்லை.
2 ஆம் இடத்தில் ராகு உட்காருவதால் கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா என்பதுபோல பணம் கொட்டும். குடும்பத்தில் சண்டை போட்டாலும் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நிறைய பேர் புது கண்ணாடி போடும் யோகம் உண்டாகும். இதனால் நல்ல மாற்றம் உண்டாகும். சிலர் பற்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். லென்ஸ் கரெக்ஷன், விட்டமின் குறைபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.
இரவு நேரத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. நடு இரவில் உணவு உண்ணுவதைத் தவிர்ப்பது நல்லது. கேது உடலில் இருக்கும் அமிலத் தன்மையை அதிகரிக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. உச்சிஷ்ட கணபதியை வழிபடுவது உங்கள் மனதில் நல்ல மாற்றம் சித்த சுத்தி உண்டாகும்.
2 ஆம் இடத்தில் ராகு உட்கார்ந்தால் கணவன் மனைவி இருவரும் சொல் பேச்சைக் கேட்பது நல்லது. இதனால் பணம் கையிருப்பு உண்டாகும். பெட்டிக் கடை முதல் சில்லறை வியாபாரம் வரை அனைத்து விதமானதையும் செய்வீர்கள். நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். மெட்டல்ஸ், ஜல்லி கற்கள், மணல், கல், ஹார்டுவேர் கடை, ஆட்டோமொபைல் கடை, டெக்னிக்கல் மெக்கானிக்கல் கடை, செக்கனன்ட் கார் விற்பது, ஆர்கானிக் பொருள்களை விற்கும் கடை போன்றவற்றை வைக்கும் யோகம் உண்டாகும்
இதுபோன்ற தொழில்கள் அனைத்தும் தொடங்க உங்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். முன்னேற்றத்தைக் கொடுக்கும். 3 ஆம் இடத்தில் சனி உட்காருவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனியின் அருளால் மன வலிமை, திட்டமிடுதல் கிடைக்கும். மகர ராசியினருக்கு சொல் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.
பரிகாரங்கள்: உச்சிஷ்ட மகா கணபதியை வழிபாடு செய்தால் கேதுவால் வரும் பாதிப்புகள் எல்லாம் தீரும். உச்சிஷ்ட மகா கணபதியின் படத்தை டவுன்லோடு செய்து மொபைல் வால்பேப்பரில் வைத்து வழிபடுவது அமோகமான பலன்களைத் தரும். சித்த சுத்தியை கணபதி அருள்வார்.












Click it and Unblock the Notifications