கும்ப ராசிக்கு குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்.. நிலம், வீடு வாங்கும் ஐடியா இருந்தா மிக கவனம்

Subscribe to Oneindia Tamil

வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

rasi-palan-find-out-what-kind-of-benefits-that-kumbam-rasi-people-will-get-in-the-month-of-vaikasi

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு முருகன் வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்க கூடிய அபரிமிதமான காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். பழைய பகைமைகளை மறந்து விடுவது நல்லது. தேக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுபகாரியத் தடைகள் நீங்கும்.

குருவின் 9 ஆம் பார்வையால் கும்ப ராசிக்காரர்களின் வீட்டில் அனுகூலங்கள் அடுத்தடுத்து ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கலாம்.

அசையும், அசையா சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக, உத்தியோகம் ரீதியாக, படிப்பு ரீதியாக, வியாபாரம் ரீதியாக தடைகள் அடுத்தடுத்து நிவர்த்தியாகும். பயணங்கள் ஆனந்தத்தை கொடுக்கும். ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, அவர்களுடைய தேக ஆரோக்கியம் கவனம் செலுத்துவது நல்லது.

உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் ஆவணம் தொடர்பாக நன்கு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். நிலத்தைப் பற்றி, வீட்டைப் பற்றி விசாரித்துக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், பணவரவு அதிகரிக்கும். ஆவணங்கள், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினாலே போதும். மற்ற விஷயங்கள் அனைத்துமே பரிபூரண நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+