Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மிக கவனமாக இருக்க வேண்டும். கண், நரம்பு, தலைவலி, இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் உரிய மருத்துவம் பெறுவது நல்லது. உத்தியோகத்திலும், தொழில், வியாபாரம், படிப்பில் செய்யாத தவறுக்கு பதில் சொல்லக்கூடிய நிலைமை ஏற்படும். தாய் வழி, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய அற்புதமான காலகட்டம்.
தனபாக்கியம்
இழுபறியாக இருக்கும் நிலைமைகள் படிப்படியாக மாறும். மேலதிகாரிகளிடத்தில் தர்க்கம் செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். விருச்சிக ராசியினருக்கு அற்புதமான காலகட்டம். நிறைய பேருக்கு பதவிகள் தேடி வரும். ஆண் குழந்தைகள் பிறக்கும். வீடு அமையும். சான்றிதழ்கள் கிடைக்கும். கோவில், குளங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தன பாக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
நிம்மதியாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆளுமை மிக்க வாரமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும். ஆளுமைத் திறன் மிக்க வாரமாக இந்த வாரம் அமையும். தலைவலி, டென்சன், கோபத்தை தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயத்திலும் ஜெயிக்கும் அமைப்பு உண்டாகும். அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இருக்கும்.
சுற்றுலா செல்லும் யோகம்
எந்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் ஆடம்பர பிராயணம், இன்ப சுற்றுலா செல்வீர்கள். வண்டி, வாகனங்களை மாற்றுவீர்கள். பெண்களுக்குத் தேவையான விஷயங்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் அழகு நிலையங்களுக்குச் செல்வது, ரிசார்டுகளுக்குச் செல்வது போன்ற எண்ணங்கள் ஏற்படும்.
வழிபாடு
பெரிய மாற்றங்கள் ஏற்படும். டென்சன் அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். பழனி முருகன் வழிபாடு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.
விநாயகர், அனுமர் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். அனுமனுக்கு வெண்ணெய் காப்பு போடுவது, வெண்ணெய் நெய்வேத்தியம் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications