தனுசு ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட் - அடுத்த 108 நாட்களில் மெகா லாபம்
தனுசு ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசி, லக்கினக்காரர்களுக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சனி பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது உங்கள் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம். குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குழநதைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் நல்ல செய்தி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் நல்ல ஏற்றம் உண்டு.
நிலம் சொத்து
சிலருக்கு பள்ளி, வங்கி ஆகியவற்றில் வேலை கிடைக்கும். ஏற்கனவே உள்ள உத்யோகத்தில் உயர் பொறுப்புகளை அடைவீர்கள் சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வண்டி, வாகனம், ஆபரணங்கள் சேர்க்கை இருக்கும். கோயில், கல்வி நிறுவனம், திருமண மண்டபம் அருகில் அற்புதமான நிலம் அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. விவசாய நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியம்
குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மனதில் இருந்த பாதிப்புகள் நீங்கி உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் உள்ளிட்ட நீண்ட கால ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்
கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் உண்டு. பொருளாதாரத்தில் உயர்வு காணப்படும். கடன் சுமை குறையும். எதிர்பார்த்த, எதிர்பாராத இடங்களில் இருந்தும் பண வரவு உண்டு. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெற்றோரால் ஆதாயம் உள்ளது. உங்கள் தாயாரின் உடல்நலத்தில் மட்டும் சற்று கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவும். உங்கள் வீட்டின் அருகே உள்ள தட்சியாமூர்த்தி கோயில் சென்று வழிபடுவது நன்மை தரும்.












Click it and Unblock the Notifications