ஆடி மாத பலன் 2025: ரிஷப ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் ஆடி மாத பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ராசிநாதன் உங்கள் வீட்டிலேயே அமர்ந்து வலுவாக இருக்கிறார். ஆடி மாதத்தில் ஜூலை 24 ஆம் தேதி 2 ஆம் சுக்கிரன், குருவுடன் இணைந்து அமரப் போகிறார். வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கப் போகிறது. ரிஷப ராசியில் சந்திரன் உச்சமடையும். அவருடைய வீட்டில் சூரியன் அமரும் இந்த ஒரு மாத காலத்தில் மிகப்பெரிய ராஜயோகங்கள் கிடைக்கும்.
இந்த ஆடி மாதத்தில் மிகப்பெரிய யோகங்கள் கிடைக்கும். செயல் வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. கேது 4 ஆம் இடத்தில் இருப்பதால் சுக ஸ்தானத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுமே தவிர, சனி, ராகு, குரு, சுக்கிரன் என அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் வலுவாக உள்ளன. 3, 2, 1 ஆம் இடம் வலுப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நினைத்தது நடக்கும்
ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். திருப்திகரமான வாழ்க்கை அமையும். இரண்டாம் வீட்டில் ராசிநாதன் போவதால் பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. வாழ்வியலில் நல்ல நல்ல மாற்றங்கள் நிகழும். வண்டி, வாகனங்களில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வீடு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பெயர், புகழ், அந்தஸ்து கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.
முன்னேற்றம்
நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். இனி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலைக்காக ஓடிக் கொண்டே இருப்பீர்கள். சோர்வில்லாத வேலையாக இருக்கும். திருமண யோகம் கைகூடி வரும். செவ்வாய் கன்னிக்கு பெயர்ச்சியாவதால் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும். நல்ல வரன்கள் அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி
கணவன், மனைவிக்குள் ஒற்றுமை, அந்நியோன்யம் அதிகரிக்கும். குதூகலமான காலகட்டமாக இருக்கும். உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் காலகட்டமாக இருக்கும். சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்வதால் சந்தோஷத்தில் உச்சத்தில் இருப்பீர்கள். நிம்மதியான மனநிலையைப் பெறுவீர்கள். படிக்கும் குழந்தைகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். 20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. பதவி உர்வு, சம்பள உயர்வு, தொழிலில் வளர்ச்சி என அனைத்தும் கிடைக்கும்.
பண வரவு
45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். துணையுடன் இருந்த வாக்குவாதங்கள் நீங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். வீடு, இடம், குடும்பம் தொடர்பான நல்ல காரியங்கள் நடக்கும். சொத்து தொடர்பான விஷங்கள் கைகூடும். குரு, சுக்கிரன் இணைவதால் பண வரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம்
உங்கள் மீதான தன்னம்பிக்கை அதிகரிக்கும், வேலையில் திருப்தி உண்டாகும். 60 வயதை தாண்டியவர்களுக்கு பிள்ளைகளால் பணம் கிடைக்கும். உங்களுடைய பழைய விஷயங்களை அசைபோட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்த என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து களத்தில் இறங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள், தகவல் தொடர்பு அதிகரிக்கும். இந்த ஆடி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் மாதமாக இருக்கும்.
வழிபாடு
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகான்கள் ரீதியான வழிபாடு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சாயிபாபா உள்ளிட்ட தங்களக்கு பிடித்த சித்தர்கள், முருக வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம்












Click it and Unblock the Notifications