Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டம். பழைய கடன்கள் அனைத்தும் தீரும் யோகம் ஏற்படும். கழுத்து, முகுது, ஒவ்வாமை, அலர்ஜி, சளி போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பதவி உயர்வு
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சுப காரியங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் நீங்கும். வெளியிடங்களுக்குச் செல்வது, தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வது, கோயில்களுக்குச் செல்வது, ஹோட்டல்களுக்குச் செல்வது, ஹோட்டல்களுக்குச் செல்வது என மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.
சிக்கல் தீரும்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் அமைப்பு ஏற்படும். லாபங்கள் கிடைக்கும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. தொழில் ரீதியாக அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகள் மேன்மை அடையும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
யோகம்
அதிகளவிலான நன்மைகள், யோகங்கள் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் நீங்கும். காதல் அமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
வழிபாடு
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்களும், நன்மைகளும் நடக்கும் நேரமாக இருக்கும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தை தரும். விஷ்ணு காயத்ரி, விஷ்ணு சஹஸ்ஹரநாமம் கேட்பது, படிப்பது யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications