RishabamRasi Palan: ரிஷப ராசிக்கு எல்லாமே சக்சஸ்.. மேலதிகாரிகளிடம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷபம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக பதட்டமில்லாமல் இருப்பது சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்பவர்களுடன் தொடர்புகளைத் தவிர்ப்பது நன்மையைத் தரும்.
அனுகூலம்
அண்டை அயலார் வீட்டு விஷயம், மேலதிகாரிகள் விஷயம், வண்டி வாகனங்களை ஓட்டும்போடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது பெரிய அமைப்பை ஏற்படுத்தும். இதுவரை தடைபட்டுக் கொண்டு இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலம். தனிப்பட்ட முறையில் எல்லா விஷயமும் பெரிய அனுகூலத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.
தடைகள் நீங்கும்
வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தர்க்கம் செய்யாமல் பொறுமை காப்பது நன்மையை ஏற்படுத்தும். தனிப்பட்ட முறையில் யோகமும், சந்தோஷமும் பெறக்கூடிய நல்ல காலகட்டம். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
மனம் தெளிவடையும்
தடைபட்டுக் கொண்டே இருந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்க ஆரம்பிக்கும். தடை, தாமதங்கள் எல்லாம் நீங்கி வேகமாக செயல்படத் தொடங்குவீர்கள். அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த குழப்பமான நிலைமைகள் எல்லாம் பனிபோல விலகி மனம் தெளிவடையும்.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு மன அழுத்தத்தை தீர்க்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் எல்லாம் தீரும். எல்லா விதத்திலும் அனுகூலம் காணப்படும். அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும். அனுமன் சாலிஷா கேட்பது, சொல்வது நன்மையைத் தரும். சனிக்கிழமை தோறும் பசுமாடுகளுக்கு உணவளிப்பது தடைகளை நிவர்த்தி செய்யும்.
-
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications