Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அதிசயம்.. எல்லாமே இனி ஜெயம்
வார ராசி பலன்: டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வெளியிடம், தொழில், பிள்ளைகள் விஷயம், தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் ஏற்றம் பெறுவீர்கள். சுபகாரியத்தில் ஏற்றம் பெறுவீர்கள். முதலீடுகள் உண்டாகும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வண்டி வாகனம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.
முன்னேற்றம்
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருக்கும் விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் திடீரென மாறும். குருவின் பார்வை பெரிய நம்பிக்கையையும், யோகத்தையும் ஏற்படுத்தும்.
ஆரோக்கியம்
பிசிஓடி, வயிறு பிரச்சனை, குழந்தை பாக்கியம் இன்மை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் போலீஸ், ராணுவம், இன்காம் டாக்ஸ் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. தந்தையின் ஆரோக்கியம், உங்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பிரச்சனை நீங்கும்
குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். புதிய கோட்பாடுகள், புதிய எண்ணங்கள் அனைத்தும் தோன்றும். நிலம், மணல், ஜல்லி, ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினால் கண்டிப்பாக வெற்றியடையும். மருத்துவர்களுக்கு, கெமிக்கல் துறைகள் நன்றாக இருக்கும். ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கும். உறவு முறையில் கோபதாபங்களைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
உத்தியோகம் ரீதியாக எடுக்கும் முடிவுகள், உள்ளூர் பயணம், வெளியூர் பயணம் மேற்கொள்ளக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மை பயக்கும். சனிக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications