ரிஷப ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது.. தொழிலில் கொட்டும் லாபம்.. இனி நல்ல நேரம் ஸ்டார்ட்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

rishabam-rasi-palan-what-kind-of-benefits-will-get-rishabam-rasi-people-during-the-month-of-aavani

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய பழைய கடன்களை எல்லாம் திரும்ப அடைப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களிடத்தில் கோபங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. தொழிலில் எந்தவொரு கவலையும் தேவையில்லை. தொழிலில் தொட்ட அனைத்து காரியங்களிலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். அடிமைத் தொழிலில் இருந்து சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வேற்று மொழி மனிதர்களால் நல்ல ஆதாயம் பெறுவீர்கள்.

வாகன யோகம்

வண்டி, வாகன மாற்றங்கள் ஏற்படும். பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. மருந்து மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். இல்லையெனில் பெரிய அளவில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதுவரை இருந்து வந்த எதிரிகள் பிரச்சனைகள் தீரும்.

முன்னேற்றம்

வழக்குகளில் வெற்றி ஏற்படும். மன அழுத்தம் நீங்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய தொழிலதிபர்களுக்கு அனுகூலம் உண்டாகும். முதலீடுகளுக்கான காத்திருப்பவர்களுக்கு நல்ல முதலீடுகள் வந்து சேரும். எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும்.

வெற்றி மேல் வெற்றி

ஆச்சரியமான முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் தீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்து வந்த சிறு சிறு மனக் கசப்புகள் நீங்கும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கவனம், வழிபாடு

ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், சர்க்கைர, ரத்த அழுத்தம், கிட்னி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு மிகுந்த நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+