Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கொட்டும் லாபம்.. சொத்துகளை வாங்கி குவிக்கும் நேரம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு லாபம் ஏற்படும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திகுக்கும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ரீதியாக நல்ல அனுகூலங்கள் காணப்படும். படிப்பில் மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல அனுகூலமும் சந்தோஷமும் ஏற்படும்.
சிக்கல் தீரும்
உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வெளிவட்டாரத்தில் அதிகமான ஏற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கொடுத்த வாக்குகளை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். பண வரவு நன்றாக இருக்கும். அசையும் அசையா பொருள் சேர்க்கை உண்டாகும்.
அலைச்சல் இருக்கும்
ஆனந்தமான காலகட்டமாக இருக்கும். எந்த காரியங்களை செய்தாலும் அதில் வெற்றி பெறக்கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு தொடர்பான விஷயங்கல் எல்லாமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். சுக்கிர காயத்ரி மந்திரத்தை கேட்பது, படிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் விளக்கேற்றுவது விசேஷத்தை ஏற்படுத்தும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
சொத்துகளை வாங்குவீர்கள். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு மரியாதை இருக்கும். ஆரோக்கியத்தில் மடடும் அக்கறை செலுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். வயிறு, கழிவுப் பாதை, கீழ் முதுகு தொந்தரவுகள் ஏற்படும். ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications