September Matha Palan: ஆரம்பத்திலேயே ஆபத்து.. ரிஷப ராசிக்கு செப்டம்பரில் காத்திருக்கும் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

Rishabam Rasi palan lucky zodiac signs

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த மாத தொடக்கத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நான்காம் இடமான சுக ஸ்தானம் பாதிக்கப்படவுள்ளது. இதனால் முதல் 15 நாட்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். கேது, புதன், சூரியன், சுக்கிரன் இணையும்போது இதுபோன்ற பிரச்சனைகள் நிகழும்.

கவனம்

வீட்டில் அடுப்பு, சிலிண்டர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. குடும்பத்தில் வீண் விரயம் அதிகரிக்கும். தாய் வழி சொந்தங்கள் அல்லது பெண் உறவுகளால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

முன்னேற்றம்

15 தேதிகளுக்கு பிறகு அந்த நிலை மாறும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ படிப்புக்கு முயற்சிப்போருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து வாய்ப்பு தேடி வரும்.

தைரியம்

உத்யோகம், தொழிலிலும் லாபம் ஏற்படும். உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் இழுபறியாக இருந்த காரியங்கள் விலகும். முதலீட்டில் லாபம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

மகிழ்ச்சி

குரு செவ்வாய் இணைவதால் உங்களின் வாக்கு ஸ்தானம் வலுபெறும். நீங்கள் சொல்வதுதான் நடக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசியல்வாதிகளுக்கு இந்த காலம் அற்புதமாக இருக்கும். பதவி, பொறுப்பு, செல்வாக்கு, சொல்வாக்கு என அனைத்திம் அதிகரிக்கும்.

பரிகாரம்

ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். வயிற்று வலி, அல்சர் பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பழநி தண்டாயுதபாணி முருகன் கோயில் சென்று வழிபடுவது முன்னேற்றத்தை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+