சனி குரு ராகு கேது பெயர்ச்சி: தொட்டதெல்லாம் தங்கம்.. "கன்னி" ராசிக்கு செம அதிர்ஷ்டம்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இது கன்னி ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது கன்னி ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
கன்னி: ஜென்ம ராசியில் இருந்து கேது விலகுவது நல்ல பலன்களை தரும். ஆறாம் இடத்தில் ராகு, ஏழாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்கள். இதுவும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு தான். வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்போருக்கு இந்த காலத்தில் எதிர்பார்த்தபடி நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ராகு பகவானால் உத்யோகத்தில் அதிர்ஷ்டம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இருப்போருக்கு அதில் நல்ல வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசியல், அரசு சம்பந்தப்பட்ட பணி மற்றும் தொழிலில் இருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
உங்களின் ஆளுமையால் எதிரிகள் அமைதியாவார்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் கைக் கொடுக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். அதனால் பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் காணப்படும். கடனின் சுமை நன்றாகவே குறையும்.
சேமிப்பு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணத்தால் நல்ல ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக உள்ள சொந்த வீடு கனவு இந்த காலத்தில் நிறைவேறும். பெண்களுக்கு நகை உள்ளிட்ட ஆடம்பர ஆபரணங்கள் சேரும்.
மனதில் நினைத்தப்படியான வாகனங்களை வாங்குவீர்கள். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருள்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்களுக்கு பெருமை சேரும். உத்யோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டு.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: பணிச்சுமையால் மன அழுத்தம் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மன வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். முதலீட்டில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூக்கமின்மை பிரச்னை ஏற்படும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications