டாப் கிளாஸாக மாறப்போகும் ரிஷப ராசியினர்.. சனிப்பெயர்ச்சியில் அத்தனை அதிர்ஷ்டமும் உங்களுக்குதான்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani-peyarchi-2025-lets-see-what-kind-of-benefits-will-give-sani-bhagavan-to-mehsam-rasi-people

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ரிஷப ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம் - ரிஷபத்துக்கு டாப் கிளாஸாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும். குருவில் இருந்து புறப்பட்டு மிதுனத்துக்கு செல்வதால் ஆரோக்கியப் பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். வீட்டில் நிறைய சுப காரியங்கள் நடக்கும். 10 ஆம் இடத்தில் இருக்கும் சனி லாப ஸ்தானத்தில் செல்வதால் முதலீட்டு விஷயங்களை மாற்றுவீர்கள். லாபம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தொகை முழுதாக கிடைக்காமல் பிரித்து பிரித்து முழுமையாக கிடைக்கும். லாபத்தை சனி பகவான் உடைத்து கொடுப்பார்.

தொழில் தொடங்கும் யோகம்

நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தள்ளிப் போனாலும் பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். 3, 7, 11 ஆம் இடம் செயல்படுவதால் மாற்றம் கண்டிப்பாக உண்டாகும். மூத்தவர்களுடன் இருந்து வந்த தகராறுகள், சர்ச்சைகள் குறையும். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் அப்படித்தான் என்கிற புரிதலுக்கு வருவீர்கள். இந்த மன மாற்றமே உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும்.

லாபம் உண்டாகும்

நல்ல புரிதலுடைய நண்பர்களுடன் சிறிய மன வருத்தங்கள் உண்டாகும். லாபத்தில் வரும் சனி நிறைய லாபங்களை கொடுப்பார். எதிர்பாராத விஷயங்கள் மூலமாக லாபம் கிடைக்கும். மேல் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, பதவிகளில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். தொழில், வேலை மூலமாக வர வேண்டிய தன பிராப்தம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம்

பென்ஷன் போன்ற உதவித் தொகைகள் வந்து சேரும். உயில் போன்றவை கிடைக்கும். குழந்தை பிராப்தத்துக்காக முயற்சிப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். திருமணமாகி விவாகரத்தானவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். ரிஷபத்துக்கு கண்டிப்பாக துணை உண்டாகும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு சரியான தீர்வு, மருத்துவர் கிடைப்பார்கள்.

தொட்டது துலங்கும்

குழந்தைகள் படிப்பு, திருமணம் போன்ற விஷயங்கள் நிச்சயம் வெற்றி உண்டாகும். நிலம் விற்று வீடு வாங்குவது, வீடு விற்பது, பணம் செட்டிலாவது போன்ற நல்ல சூழல் உண்டாகும். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும்.

மதிப்பெண்

பொருளாதாரம், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

கால் முட்டி தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விட்டமின் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பரிகாரம், வழிபாடு

வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்வது அமோகமான பலன்களைத் தரும். பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற அபிஷேகங்களை செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+