அம்பானியாக மாறப்போகும் மிதுன ராசி.. சனிப்பெயர்ச்சியில் வேற லெவல் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.

நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani-peyarchi-2025-midhunam-rasi-will-reach-new-hights-in-business-lets-see-what-kind-of-benefits

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மிதுனம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம் - மிதுனம் ராசிக்கு உங்களின் பத்தாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். பத்து என்பது தொழில் மற்றும் கர்ம ஸ்தானமாகும். இதனால் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்க போகிறது. மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகின்றன. தொழிலில் வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க போகிறீர்கள்.அதிலும் மிதுன லக்னமாக இருந்தால் ஜாக்பாட் அடிக்க போகிறது.

வெளிநாடு வாய்ப்பு

உத்யோகத்தில் நல்ல ஏற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் அடுத்தடுத்து கிடைக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றங்கள் கிடைக்கும். வெளிநாடு வாய்ப்புகள் கைக்கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழிலில் நல்ல பணியாட்கள் கிடைப்பார்கள்.

சொத்து

பணவரவு திருப்தியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் கூட பணவரவு கிடைக்கும். தாய் வழியில் சொத்துகள் சேரும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னை சரியாக, அந்த சொத்து விற்பனையாகி உங்களுக்கு பங்கு கிடைக்கும்.

கலைத் துறை

சகோதர வழி உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கலை, சினிமா, ஊடகம் மற்றும் ஜோதிடம் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போருக்கு இந்த காலம் மிகப்பெரிய உயர்வை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாழ்க்கையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து காரியங்களும் நடக்கும்.

திடீர் அதிர்ஷ்டம்

இதுபோல ஒரு காலகட்டம் மீண்டும் அமைவது அரிது. எனவே இதை சரியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். பல திடீர் அதிர்ஷ்டங்களால் உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும். வாழ்க்கை துணை பெயரில் வீடு அல்லது சொத்து வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டு.

வெற்றி மேல் வெற்றி

நீங்கள் இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு இது சரியான கால கட்டம். உங்களின் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி வேட்கை அதிகரிக்கும். அதனால் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மதிப்பெண்

தொழில், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் 100க்கு 95 சதவீதம் சிறப்பாக இருக்கும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

சில இடங்களில் உங்களின் பிடிவாத குணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம், வழிபாடு

சனிக்கிழமை தினத்தில் ராமேஸ்வரம் ராமர் பாதத்தை வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும். அலுவலகம் அல்லது பூஜை அறையில் ராமர் பாதம் புகைப்படத்தை வைத்து தினசரி வழிபடலாம்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+