Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. யார் கவனமாக இருக்க வேண்டும்?.. 12 ராசிகளுக்கான பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இன்று இரவு 11 மணிக்கு மேல் பெயர்ச்சி ஆகிறார். சனி கிரகத்தின் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் முதல் மீன ராசி வரையிலான 12 ராசிகளுக்குமான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

sani peyarchi Sani peyarchi palangal Astrology

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி இரவு 11 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ராசிக்குமான பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனி தொடங்குகிறது. விரையச் சனி என்பதால் வருமானத்துக்குப் பஞ்சமிருக்காது. மாற்று யோசனைகளால் அனைத்து காரியங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். செலவுகள் அதிக அளவில் ஏற்படும். அது சுபச் செலவுகளாக இருக்கும். உத்தியோகத்தில் பல பொறுப்புகள் தேடி வரும்.

ரிஷபம் - ரிஷபத்துக்கு பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சனி பகவான் லாப ஸ்தானமாகிய 11 ஆம் இடத்தில் அமர்ந்து நல்ல பலன்களைத் தரப் போகிறார். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி பகவான் பெயர்ச்சியாகிறார். தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் பண வரவுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் அதில் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

கடகம்: கடக ராசியினருக்கு அஷ்டமத்து சனி விலகப் போகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடுமையான துன்பங்களை அனுபவித்த உங்களுக்கு இனி பொன்னான காலமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். புத்துணர்ச்சி, நம்பிக்கை பிறக்கும் காலகட்டமாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்கு அஷ்டம சனி ஆரம்பிக்கப் போகிறது. கடன் விஷயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் எந்த காரியங்களையும் விழிப்புணர்வோடு செய்வது நன்மை பயக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டகச் சனி ஆரம்பமாகிறது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சகோதர, சகோதரிகளால் உண்டாகும் கடன் பிரச்சனை உங்ளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆடம்பர செலவுகளைச் செய்வதை தவிர்ப்பது நல்லது. நகைகள், ஆவணங்கள் விஷயத்தில் கவனம் தேவை.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பண வரவு அதிகரிக்கும். பேச்சு வன்மை அதிகரிக்கும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சொந்த வீடு கட்டுவது, வாங்குவது, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைப்பது போன்ற அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். மகனுக்கு திருமண யோகம் உண்டாகும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி விலகுவதால் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்த அளவு சேமிப்புகளை மேற்கொள்வது நல்லது. சுப செலவுகளுக்காக கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பெண்கள் சமையல் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது. பேச்சு மற்றும் செயலில் கவனமாக இருப்பது நல்லது. விலை உயர்ந்த பொருள்கள், தங்க நகைகளை வெளியில் இரவல் கொடுப்பது, வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பண வரவு திருப்தியாக இருக்கும். இருப்பினும் தவிர்க்க முடியாத செலவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது. சில தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும். இருப்பினும் அதனை சமாளிக்கும் பங்குவம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தியானம், யோகா போன்றவற்றை செய்வது நல்லது.

மகரம்: மகர ராசிக்காரர்கள் ஏழரைச் சனியில் இருந்து விடுதலை பெறுகிறீர்கள். கடன் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். திருமண யோகம் உண்டாகும். சொந்த வீடு வாங்கும், கட்டும் யோகம் உண்டு. இனி எடுத்த காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். மந்த நிலை, தடை அமைப்பு போன்றவை அடியோடு மாறும். நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றும் கிடைக்கும். வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தொட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மச் சனி விலகுகிறது. சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இரண்டரை ஆண்டுகாலம் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் பலன் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பாதச் சனி தொடங்குவதால் கணவன், மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பிறர் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நோய்கள், வழக்குகள் தீரும். திருமண காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அடுத்த வரை நம்பி ஒரு காரியத்தை செய்யாமல் இருப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. பணம், உறவுகள் என வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் உங்களுக்குப் புரியவைக்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தைகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகனம், நகை வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்களை செய்து மகிழ்வீர்கள். வீண் அலைச்சல், திடீர் பயணங்கள் உண்டாகும். வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டும் யோகம் உண்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+