சனிப்பெயர்ச்சி: சிம்மத்தை ஆட்டிப் படைக்கும் அஷ்டம சனி.. எதில் கவனமாக இருக்க வேண்டும்?
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு அஷ்டம சனி எப்படி இருக்கும், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால்தான், கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு அஷ்டம ஸ்தானத்துக்கு சனி பகவான் செல்கிறார். இந்த அஷ்டம சனியால் சிம்ம ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
சிம்ம ராசியினருக்கு 8 ஆம் இடத்தில் சனி பகவான் வருகிறார் அஷ்டம சனி ஆரம்பமாகப் போகிறது. ஒரு மனிதனுக்கு அதிமான சோதனைகளை கொடுக்கக்கூடிய இடம் 8 தான். சிகரத்தை தொடும் வாய்ப்புகளைத் தரும் 8 ஆம் இடம், சிரமங்களையும், துன்பங்களையும் தரக்கூடியதாகும். தொழில் வேலை, வருமானம் தொடர்பான விஷயங்களில் ஜாக்கிரதையான முடிவுகளை எடுக்க வேண்டும். திடீரென வரும் மாற்றங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அது முன்னேற்றத்தை தராது.
ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 8 இல் சனி வரும்போது நீங்கள் செய்யக்கூடிய துறையிலேயே சோதனையை ஏற்படுத்தும். வாகனங்களை ஓட்டும்போது கண்டிப்பாக விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையுடனும், ஹெல்மெட் அணிந்தும் செல்வது நல்லது. மலையேற்றம், கடலில் குளிப்பது போன்ற சாகச பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
சனி பார்வை விழுவதால் சாப்பிடும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய உணவுகளை முயற்சி செய்வது, திடீர் திடீரென ஒரு முடிவெடுத்து ஒரு வேலையைச் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சோதனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவியைப் பற்றி வெளியில் சொல்வதை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது.
சேமிப்பு, முதலீடு, புதிய தொழில் தொடங்குவது, கடன் வாங்கித் தருவது, ஜாமீன் நிற்பது, நகையை கொடுப்பது போன்ற விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அஷ்டம சனி உங்களுக்கு ஆரோக்கியம், குடும்பம், உறவுகள், வேலை, பணம், அந்தஸ்து போன்ற விஷயங்களில் கண்டிப்பாக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அடக்கம், அமைதியாக இருப்பது உங்களை இந்தப் பிரச்சனைகளில் இருந்து காக்கும். தானம், தர்மத்தில் ஈடுபடுவது நல்ல பலன்களைத் தரும். பக்தி, தானம், தர்மம், அமைதியாக இருப்பது உங்களுக்கு அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications