சனிப்பெயர்ச்சி: அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெறும் கடகம்.. பாக்கிய சனியால் இனி அதிர்ஷ்டம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு பாக்கிய சனி எப்படி இருக்கும், என்ன விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.
நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்
2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் அஷ்டம சனியில் இருந்த சனி பகவான் கடக ராசியினருக்கு பாக்கிய ஸ்தானத்துக்கு செல்கிறார். இந்த பாக்கிய சனியால் கடக ராசியினருக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அனைத்து கஷ்டங்களுக்கும் இப்போது அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் கடக ராசிக்காரர்கள்தான். கஷ்டங்கள், துன்பங்கள், பாதிப்புகள் என அனைத்துவிதமான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். அஷ்டம சனியால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த உங்களுக்கு எப்போதுதான் இது முடியும் என்ற கேள்வி கண்டிப்பாக இருக்கும்.
சனி ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாக இரண்டரை ஆண்டுகாலம் ஆகும். அஷ்டம சனியும் இரண்டரை வருடம் நடக்கும். ஏழரை சனியில் ஏழரை வருடம் தரும் கஷ்டத்தை சனி பகவான் அஷ்டம சனி நடக்கும்போது அந்த கஷ்டத்தை இரண்டரை வருடத்திலேயே தருவார் என்பதுதான் இதில் கொடுமை. ஏழரை வருடம் அனுபவிக்க வேண்டிய கஷ்டத்தைதான் கடந்த இரண்டரை ஆண்டுகள் நீங்கள் அனுபவித்து வந்திருப்பீர்கள்.
கடக ராசிக்காரர்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குடும்பம், வேலை, நண்பர்கள் என எந்தவொரு இடத்திலும் உங்களுக்கு ஆதரவில்லாமல் சிரமப்பட்டு வந்திருப்பீர்கள். ஒரு ராசிக்கு 8 இல் சனி சஞ்சரிக்கும் காலகட்டம்தான் அஷ்டம சனி காலகட்டம். கடக ராசிக்காரர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியில் நடந்த சனிப்பெயர்ச்சியில் இருந்து அஷ்டம சனி ஆரம்பமாகி இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த அஷ்டம சனியானது 2025 ஆம் ஆண்டு வரும் மார்ச் 29 ஆம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சியுடன் முடிவடைகிறது. உங்களுடைய வாழ்க்கையில் 100 சதவீத மாற்றத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். மாற்றம், நிம்மதி நிறைந்த வாழ்க்கையை இனி மகிழ்ச்சியாக வாழப்போகும் யோகம் உங்களுக்கு உண்டாகும். கும்ப ராசியில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சியாகிறார்.
அதேபோல, உங்களுக்கு கஷ்டங்கள் இடப்பெயர்ச்சியாகி இனி வாழ்க்கையில் நன்மைகள் குடிகொள்ளப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் பிறப்பிக்கப் போகிறது. பொன்னான காலகட்டத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், அன்பு பெருகும். முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.
கடக ராசிக்கு 9 இல் பாக்கிய சனியாக சனி பகவான் வருவதால் அதிர்ஷ்டம், யோகம் கொட்டும் காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் என அனைத்து பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போதும், பேசும் வார்த்தைகளிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications