விருச்சிக ராசியினருக்கு அடித்த ஜாக்பாட்.. பிரச்னைகள் எல்லாம் ஓவர்.. இனி அதிர்ஷ்டம், பணம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி: ஒன்பது கிரகங்களில் மிகவும் வலிமை வாய்ந்த கிரகம் சனி பகவான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது போல நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் சமமாக கொடுப்பவர். நீண்ட காலமாக எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகத்தைப் பெறப் போகின்றனர். விருச்சிக ராசியினருக்கு என்ன அதிர்ஷ்டங்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
கிரக மாற்றம்
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

சனி பகவான்
கர்மக்காரகன், நீதிமான் என்று அழைக்கப்படக் கூடிய சனி பகவான் நாம் செய்யும் கர்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு சுப, அசுப பலன்களை தரக்கூடியவர். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கவுள்ளது. அதில் முதன்மையான ராசியாகவும் 90 சதவீத பலனைப் பெறப்போகும் ராசியாகவும் விருச்சிக ராசியினர் உள்ளனர்.
விருச்சிக ராசி பலன்
அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி பகவானால் என்னவிதமான அதிர்ஷ்டம் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகிறது என்று தெளிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் 90 சதவீத நன்மையைப் பெறப் போகின்றனர். பஞ்சம ஸ்தானத்தில் சனி பகவான் வந்து அமர்ந்துள்ளார். பூர்வீக சொத்து, குழந்தைகள் வாழ்க்கை, பொருளாதார பலம் ஆகியவை கொண்டவை தான் பஞ்சம ஸ்தான அமைப்பு. அர்த்தாஷ்ட சனி இப்போது விலகியுள்ளதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்பத்தி சார்ந்த தொழில்களைச் செய்தால் மிகப்பெரிய வளர்ச்சிகளை அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
குழந்தை பாக்கியம்
பூர்வீகச் சொத்தால் அதிர்ஷ்டம் பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய முன்னேர்களால் எதாவதொரு நல்ல பலனை அடைவீர்கள். குலதெய்வத்தின் அருளாசி உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குழந்தை பாக்கியம் கட்டாயம் பெறுவீர்கள்.
கடன் சுமை தீரும்
காதல் உறவுகள் திருமண பந்தத்தில் முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். கடன் சுமைகள் குறையும். முன்னேற்றத்துக்கான பாதை அமையும். இந்த இரண்டரை ஆண்டு காலத்தை பயன்படுத்தினால் நீங்கள் கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கான அதிர்ஷ்டம் உண்டாகும்.
லாபம், அதிர்ஷ்டம்
காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாய்ப்புகள் அடுத்தடுத்து கதவைத் தட்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சி செய்தால் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும், அதன் மூலம் லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வீடு, நிலம், வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டாகும். நீண்ட காலமாக திட்டமிட்டு வீடு கட்ட முயற்சிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் நடக்கும்.
ஆரோக்கியம் கவனம்
ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. எதாவது ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டாலும் பெரிய அளவில்பயப்படத் தேவையில்லை. வீடு, வாகனம், நிலம், முதலீடு, சேமிப்பு என அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications