சனிப்பெயர்ச்சி: கும்பம் ராசிக்கு இனி ஏற்றம் மட்டும்தான்.. பணத்தை அள்ளி கொடுக்கும் சனி பகவான்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கும் ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். கும்பம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்: கும்பம் ராசிக்கு உங்களின் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். ஜென்ம சனி விலகுகிறது. உத்யோகத்தில் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறும் நிலை உருவாகும். உங்கள் வார்த்தைகளில் நிதானம் வெளிப்படும். அடமானம் வைத்த நகைகளை மீட்பீர்கள்.
எதிர்பார்த்த இடத்தில் இருந்து புதிய கடன் கிடைக்கும். கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இது பொற்காலம். இரண்டாம் என்பது குடும்ப ஸ்தானம். இதனால் இந்த காலத்தில் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமணம் நடைபெறாமல் இருப்போருக்கு இந்த காலத்தில் திருமண யோகம் உண்டாகும். காதல் திருமணம் கைக்கூடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனைப்பட்டவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் நகை உள்ளிட்ட ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். இறங்கிய காரியங்களில் வெற்றிகள் குவியும். வீடு, நிலம் உள்ளிட்ட விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.
பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். யாராலும் செய்ய முடியாத சாதனைகளை செய்வீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். சிந்தனையில் மேம்பாடு இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் செய்வதற்கு இது சரியான காலம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள் வந்து செல்லும். உறவுகளிடம் பேசும்போது மட்டும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் வாக்கை காப்பாற்ற முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்படும். எனவே பொறுமை அவசியம். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சிக்கனம் தேவை.
நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை. சட்டரீதியாக நன்கு ஆய்வு செய்துவிட்டு அதில் இறங்க வேண்டும். முதலீடு சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கண், காது, மூக்கு மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வந்து செல்லும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications