Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன் 2023: அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வை...தொழிலில் லாபம்..யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நல்லவர்களுக்கு நல்லதையும் பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் தண்டனைகளையும் படிப்பினைகளையும் கொடுப்பார் சனிபகவான். மகர ராசியில் பயணம் செய்த சனிபகவான் கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து தற்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு இடம்மாறியுள்ளார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் திடீர் ராஜயோகத்தையும் தரப்போகிறதாம். என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

சனிபகவான் கோச்சார ரீதியாக ராசிக்கு 3,6,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நிறைய நன்மைகளை செய்வார். இப்போது கால புருஷ தத்துவத்தின்படி 11ஆம் வீட்டில் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இது ரிஷப ராசிக்கு 10ஆம் இடமாகும். சனிபகவான் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் பயணம் செய்வது பல ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரப்போகிறது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் கர்ம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் சனிபகவான். இரண்டரை ஆண்டுகளுக்கு அபரிமிதமான யோகத்தையும் வேலையில் மிகப்பெரிய மாற்றத்தையும் தரப்போகிறது. ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிகழப்போகும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து பயணம் செய்வது தர்ம கர்மாதிபதி யோகத்தை தரப்போகிறது. தொட்ட காரியம் துலங்கும். தொழில், வியாபாரம் விருத்தியடையும். நம்பிக்கை அதிகரிக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் தொழிலால் நஷ்டமடைந்தவர்கள் இனி வெற்றிக்கொடி நாட்டப்போகிறீர்கள்.

பண விசயத்தில் கவனம் தேவை

பண விசயத்தில் கவனம் தேவை

ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் வேலை தொழிலில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்வீர்கள். வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது அவசியம். யாருக்காகவும் எதற்காகவும் பணத்தை கடனாக கொடுக்கவேண்டாம். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக்கொடுக்க வேண்டாம்.

நிம்மதி கிடைக்கும்

நிம்மதி கிடைக்கும்

குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நீங்கள் கொடுத்த கடன்கள் வசூலாகும். புதிய சாதனைகளைப் படைக்கப்போகிறீர்கள். சனிபகவானின் 3வது பார்வை 12வது வீடான அயன சயன ஸ்தானத்தின் மீது விழுகிறது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வீடு இடமாற்றம், வேலை, அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும். நீங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். சுப விரைய செலவுகளும் உண்டாகும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்

ஆரோக்கியம் அதிகரிக்கும்

சுக ஸ்தானமான 4வது வீட்டின் மீது சனிபகவானின் பார்வை விழுவதால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கடன் பிரச்சினைகள் நீங்கும் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். வீடு, நிலம் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் குதூகலம்

சனிபகவானின் பத்தாவது பார்வை உங்களின் களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. கணவன் மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஊடல் வந்தாலும் கூடல் காரணமாக மனதில் உற்சாசம் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். நிரந்தர வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சந்தோஷங்களை தரப்போகிறார் சனிபகவான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+