Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியிலும் அதிர்ஷ்டம்.. தினமும் இதை மட்டும் செய்து பாருங்க
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு [Dhanusu Sani peyarchi palan]
தனுசு ராசியினருக்கு 3 ஆம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் தற்போது 4 ஆம் இடத்துக்கு அர்த்தாஷ்டம சனியாகப் பெயர்ச்சி ஆகியிருக்கிறார். தினந்தோறும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம். உடற்பயிற்சி செய்யவில்லையெனில் தேவையில்லாத மன அழுத்தமும், பிரச்சனைகளும் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பயணம்
உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மட்டும் மிக கவனமாக இருப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, உறவுகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. வேலை ஆட்கள், துணையிடம் சண்டை, தகராறு செய்வது, அவர்களை அவமானப்படுத்துவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் உங்களைவிட்டு விலகிச் செல்வதற்கான சூழல் ஏற்படும்.
கோபம் வேண்டாம்
எந்த உறவுகளாக இருந்தாலும் அரவணைத்துக் கொள்வது நல்லது. யார் எது சொன்னாலும் உங்களுடைய துணை உங்களை விட்டு விலகிச் செல்லவே மாட்டார்கள். உங்களுடைய அன்பு அவ்வளவு பரிசுத்தமாக இருக்கும். உங்களைச் சுற்றி சிறிய வட்டம் இருந்தாலும் உங்கள் மேல் அவ்வளவு அன்பாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதீத கோபம், ஆவேசப்படுவதை தவிர்ப்பது நல்லது.
தனவரவு
வண்டி வாகனங்கள் வாங்குவது, அசையும் அசையா பொருள்கள் வாங்குவது, ஆடை ஆபரணங்களை சேர்ப்பது, தன அமைப்பு உண்டாகும். தொழில் விஷயத்தில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தையை தத்தெடுக்கக்கூடிய பாக்கியம் உண்டு. அந்த குழந்தைகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில்
புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். அந்த தொழிலில் பெரிய சாதனைகள் செய்வீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது, கோசாலை, பசுமாடுகள் வளர்ப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். அதில், அற்புதமான சந்தோஷங்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது.
பரிகாரம்
பெரிய வெற்றிகளும், சந்தோஷமும் ஏற்படும். இழுபறியாக இருந்த பலவிதமான கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உடற்பயிற்சி செய்வதை மட்டும் விட்டுவிடாமல் இருப்பது நல்லது. முதுகு தண்டுவடம், கழுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திருச்செந்தூர் செல்வது மேன்மையைத் தரும். மாதம்தோறும் வியாழக்கிழமைகளில் மகான்கள் வழிபாடு செய்வது நல்லது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications