Sani Peyarchi: கன்னி ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் அதிர்ஷ்டம்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி [Kanni Sani peyarchi palan]
கன்னி ராசியினருக்கு 6 ஆம் இடத்தில் இருந்த சனி 7 ஆம் இடத்துக்குச் செல்கிறது. இந்த சனி கண்டகச் சனியாகும். வேற்று மொழி மனிதர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். திருமணத் தடைகள், குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். கண்டகச் சனியிலும் திருமண யோகம், பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும்.

திடீர் அதிர்ஷ்டம்
விவாகரத்துகள் கிடைக்கும். நல்ல வரன்கள், உறவுகள் கிடைக்கும். கடல் கடந்த பயணம் மேற்கொள்ளக் கூடிய யோகம் உண்டாகும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் செய்யும் தவறால் தேவையில்லாமல் பிரச்சனைகளுக்குள் சிக்கும் சூழல் உள்ளதால் கவனம் தேவை.
பொறுமை அவசியம்
உங்கள் மனது சொல்வதை கேட்பது, செயல்படுத்துவது நல்லது. பெரிய பதவிகளில் இருப்பவர்கள் உங்களைக் கட்டுப்படுத்துவது, மிரட்டுவது போன்ற சூழல் ஏற்படும். பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. வாகனத்தில் செல்பவர்கள் அதீத கவனமாக இருக்க வேண்டும். சாதாரண உணவு சாப்பிடுவது கூட பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
தண்ணீர் குடிக்கும் இடத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடல் கடந்து பயணம் மேற்கொள்ளும்போது, சுற்றுலா செல்லும்போது சாப்பிடும் விஷயத்தில் மிக கவனமாக இருப்பது நன்மை பயக்கும். உணவு முறையில் அதிக கவனம் தேவை. கோவில் திருப்பணிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
கஷ்டம் தீரும்
தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள், மன பாரங்கள் அனைத்தும் நீங்க தெய்வ வழிபாடுகள் மிகவும் முக்கியம். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மேல்மலையனூர் அங்காளம்மன் வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமையில் இஷ்ட தெய்வ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அபிராமி அந்தாதியில் இருக்கம் பாடல்களைக் கேட்பது, சொல்வது அற்புதமான முன்னேற்றத்தைத் தரும். துர்க்கை கவசத்தை படிப்பதும் நல்லது.












Click it and Unblock the Notifications